Header Logo
Mogo Academy

வணிகம்
மேம்படுத்தப்பட்ட சுய உள்ளீர்ப்புத் தளத்தின் மூலம் தடையற்ற கணக்கு ஆரம்பித்தல் செயல்முறையை கொமர்ஷல் வங்கி செயல்படுத்துகிறது

Jun 1, 2026 - 04:33 PM -

0

மேம்படுத்தப்பட்ட சுய உள்ளீர்ப்புத் தளத்தின் மூலம் தடையற்ற கணக்கு ஆரம்பித்தல் செயல்முறையை கொமர்ஷல் வங்கி செயல்படுத்துகிறது
Mobitel inner

கொமர்ஷல் வங்கியானது டிஜிட்டல் புத்தாக்கம், மேம்பட்ட அணுகல் வசதி மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றில் வலுவான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் நிலையில் தனது சுய உள்ளீர்ப்புத் (Self-Onboarding) தளத்தை மேலும் மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம், வங்கியில் புதியதாக சேரும் வாடிக்கையாளர்கள் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியமின்றி, மேலும் எளிமையான, பாதுகாப்பான மற்றும் முழுமையாக காகிதமற்ற டிஜிட்டல் அனுபவத்தின் மூலம் கணக்குகளைத் திறக்க முடியும். 

மேம்படுத்தப்பட்ட இந்த தளமானது, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களையும் உள்ளடக்கிய நிலையில் வாடிக்கையாளர்கள் இணையதளம் அல்லது கைபேசி மூலம் புதுப்பிக்கப்பட்ட தளத்தின் வழியாக உடனடியாக சேமிப்பு கணக்குகளைத் திறக்க அனுமதிக்கும் முழுமையான டிஜிட்டல் தீர்வை வழங்குகிறது. இந்த தீர்வானது, நேரடி காணொளி அடையாளச் சரிபார்ப்பு மற்றும் தானியங்கி இணக்கத்தன்மை சோதனையின் மூலம் டிஜிட்டல் கணக்கு திறப்பு அனுபவத்தை வழங்குகிறது. 

கொமர்ஷல் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரியான திரு. ஹஸ்ரத் முனசிங்க இது தொடர்பாக தெரிவிக்கையில்: காகித அடிப்படையிலான செயல்முறைகளின் பயன்பாட்டை குறைப்பதன் மூலம், பசுமை வங்கி நோக்கங்களை ஆதரித்து, சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான வங்கி அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், வங்கி தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு மேலும் வசதியான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் தடையற்ற வங்கி அனுபவத்தை வழங்கி வருகிறது. இந்த முயற்சிகள், பாதுகாப்பான, மேலும் திறமையான மற்றும் நெகிழ்வான கணக்கு திறப்பு அனுபவத்தை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சேவையை எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பாதுகாப்பாக அணுக முடியும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய அம்சங்கள் மற்றும் மேம்பட்ட திறன்கள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், இந்த தளம் தொடர்ந்து வளர்ச்சியடையும். இதன் மூலம், எதிர்காலத்திற்குத் தயாரான, தடையற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்கான வங்கியின் அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்படுவதுடன், டிஜிட்டல் வங்கி வசதிகளில் புதிய தரநிலைகளையும் நிறுவும் என்று வங்கி தெரிவித்துள்ளது. 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 270ற்கும் மேற்பட்ட தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 21 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara