Header Logo

செய்திகள்
இந்த ஆண்டில் இதுவரை 33,572 டெங்கு நோயாளர்கள் பதிவு

Jun 1, 2026 - 11:13 PM -

0

இந்த ஆண்டில் இதுவரை 33,572 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 33,572 டெங்கு நோயாளர்களும் 19 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

மே மாதத்தில் மாத்திரம் 8321 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா குறிப்பிட்டுள்ளார். 

இந்த நோயாளர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

டெங்கு நோயாளர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா மேலும் தெரிவித்துள்ளார். 

மேலும் கருத்துத் தெரிவித்த சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா, 

"டெங்கு நோயினால் இதுவரை 33,572 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இன்னும் ஆறு மாதங்களே ஆகியுள்ளன. 19 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நேரத்தில் 72 சுகாதார அதிகாரி பிரிவுகள் (MOH) அவதானமிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நோயாளர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே காணப்படுகின்றனர். அத்துடன் தென் மாகாணத்தில் 16 சதவீதமும், சப்ரகமுவ மாகாணத்தில் 09 சதவீதமும் தற்போது வரை பதிவாகியுள்ளனர்" என்றார்.

MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title