Header Logo

செய்திகள்
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும்

Jun 1, 2026 - 11:54 PM -

0

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும்

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 'சுபம்' நிறுவனத்தின் ‘சிவகங்கை’ கப்பலானது, எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கும் என அந்த கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 

கடலில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த கப்பல் பழுதடைந்ததை அடுத்து, அதன் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. 

தற்போது பழுதுபார்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் புதன்கிழமை முதல் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. 

இச்சேவையானது வழமை போல் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் ஏனைய ஆறு நாட்களும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்பயணத்திற்கான பயணச்சீட்டுகளை www.sailsubham.com என்ற இணையதளத்தின் ஊடாகவோ அல்லது 0212224647, 0117642117 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title