Header Logo

வணிகம்
வெசாக் பண்டிகையை முன்னிட்டு ‘சம்பந்தியாவே தஹமி சத்காரய’ மருத்துவ முகாம் 2026 மாத்தறையில் முன்னெடுப்பு

Jun 2, 2026 - 12:08 PM -

0

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ‘சம்பந்தியாவே தஹமி சத்காரய’ மருத்துவ முகாம் 2026 மாத்தறையில் முன்னெடுப்பு

தேசிய தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, வெசாக் பண்டிகையைக் கொண்டாடும் முகமாக அண்மையில் மாத்தறையிலுள்ள தனது பிராந்திய அலுவலகத்தில் வருடாந்த மருத்துவ முகாமை நடத்தியிருந்தது. இதன் மூலம் அப்பிரதேச மக்களுக்கு அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகளைப் இலவசமாகப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை நிறுவனம் வழங்கியிருந்தது. 

நிறுவனத்தின் சம்பந்தியாவே தஹமி சத்காரய சமூகத் திட்டம் மற்றும் அதன் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுமை (ESG) அர்ப்பணிப்புகளின் கீழ் நடத்தப்பட்ட மருத்துவ முகாம் 2026, குருதிப் பரிசோதனை, செவிப்புலன் பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் இலவசக் கண்ணாடி விநியோகம், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பொதுவான சுகாதாரப் பரிசோதனைகள் உள்ளிட்ட விரிவான மருத்துவச் சேவைகளையும் நோய்த்தடுப்புச் சுகாதார வசதிகளையும் வழங்கியிருந்தது. 

மேலும், அன்றைய நாள் முழுவதும் அனுபவம் வாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் கலந்துகொண்டு, வருகை தந்திருந்த அனைவருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட கவனிப்பையும் முறையான மருத்துவப் பரிசோதனைகளையும் உறுதிசெய்தனர். மாத்தறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இம்முன்னெடுப்பின் மூலம் பயனடைந்ததுடன், இதில் சுகாதார விழிப்புணர்வுத் திட்டங்கள், குருதிச் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தப் பரிசோதனைகள் உள்ளிட்ட பல மருத்துவச் சேவைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன. 

பாரம்பரிய சுகாதாரச் சேவைகளுடன் டிஜிட்டல் புத்தாக்கங்களை ஒருங்கிணைப்பதற்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், இந்த மருத்துவ முகாம் SLT-MOBITEL மற்றும் eChannelling ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாத்தறை ஆசிரி ஹொஸ்பிட்டல், விக்ரமாராச்சி ஒப்டீஷியன்ஸ், மலிபன் பிஸ்கட்ஸ், சைக்கிள் பியூர் மற்றும் ORB Collective ஆகிய முக்கிய பங்காளர்களின் பெறுமதிமிக்க ஆதரவின் மூலம் இம்முன்னெடுப்பு மேலும் வலுவடைந்ததுடன், இந்த நிறுவனங்கள் ஒவ்வொருவரும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்குப் பங்களிப்புச் செய்திருந்தன. இந்த அர்ப்பணிப்பிற்கு இணங்க, இம்முன்னெடுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்கு 3 இற்கு (Sustainable Development Goal 3 - நல்ல ஆரோக்கியமும் நல்வாழ்வும்) ஆதரவளிப்பதாக அமைந்ததுடன், அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்குமான முயற்சிகளையும் பலப்படுத்தியுள்ளது. 

இதற்கு முன்னர் இரத்மலானை மற்றும் கம்பஹாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட வெசாக் கால சுகாதார முகாம்களின் தொடர்ச்சியாக அமைந்த இந்த வருடத்திய முன்னெடுப்பானது, கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு (CSR) மற்றும் சமூக நல்வாழ்வு மீதான SLT-MOBITEL இன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. வெசாக் பண்டிகையின் உன்னத நோக்கத்திற்கு அமைவாக, இத்திட்டம் சமூகங்களுக்குக் கருணை, அரவணைப்பு மற்றும் அத்தியாவசிய மருத்துவ ஆதரவைக் கொண்டு சேர்த்துள்ளதுடன், இலங்கையில் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சமூக மேம்பாடு ஆகிய இரண்டையும் ஊக்குவிப்பதில் ஒரு நம்பகமான பங்காளராக SLT-MOBITEL கொண்டுள்ள பங்கினை மேலும் பலப்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title