Header Logo
Mogo Academy

வணிகம்
சீனாவின் நிதியுதவியுடன் கொழும்பில் சிக்கனமான விலைகளைக் கொண்ட வீடமைப்புச் செயற்திட்டத்தை நிர்மாணிப்பதில் முக்கியமான சாதனை மைற்கல்லினை CHEC நிறுவனம் நில

Jun 2, 2026 - 12:10 PM -

0

சீனாவின் நிதியுதவியுடன் கொழும்பில் சிக்கனமான விலைகளைக் கொண்ட வீடமைப்புச் செயற்திட்டத்தை நிர்மாணிப்பதில் முக்கியமான சாதனை மைற்கல்லினை CHEC நிறுவனம் நில
Mobitel inner

கொழும்பில் சீனாவின் உதவியுடன் சிக்கனமான விலைகளைக் கொண்ட வீடமைப்புச் செயற்திட்டமொன்றை நிர்மாணித்து வருகின்ற China Harbour Engineering Company (CHEC) நிறுவனம், 2026 மே 12 அன்று மகரகமை நிர்மாணத் தளத்தில் மேற்தள கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, பாரிய சாதனை மைற்கல்லொன்றை நிலைநாட்டியுள்ளது. இலங்கையில் குறைந்த வருமானத்தை ஈட்டுகின்ற குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்காக 1,996 அடுக்குமனைகளைக் கொண்ட வீடமைப்புச் செயற்திட்டத்தை நிர்மாணிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, 112 அடுக்குமனைகளைக் கொண்ட மேற்குறிப்பிட்ட செயற்திட்டத்தின் பிரதான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளமையை இந்த சாதனை மைற்கல் குறித்து நிற்கின்றது. 

Belt and Road முயற்சியின் கீழ் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் CHEC நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படும் இச்செயற்திட்டமானது தரமான, சிக்கனமான விலைகளில் கிடைக்கும் வீடமைப்பை வழங்கும் அதேசமயம் நகர்ப்புறத்தில் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்குப் பங்களிக்கின்றது. சமூகத்தின் நடைமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, நீண்ட கால அடிப்படையில் சமூக அபிவிருத்திக்கு ஆதரவளிக்கின்ற உட்கட்டமைப்பின் வழங்குவதில் சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில் தொடருகின்ற ஒத்துழைப்பினை இச்செயற்திட்டம் பிரதிபலிக்கின்றது. 

மகரகமை செயற்திட்டத்தின் மேற்தள நிர்மாணப் பணிகளின் பூர்த்தியைக் குறிக்கும் வைபவத்தில் இச்செயற்திட்டம் இது வரை அடைந்துள்ள முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் செயற்திட்டத்தின் பிரதிநிதிகளும், தொடர்புபட்ட ஏனைய தரப்பினரும் கலந்து சிறப்பித்துள்ளனர். இத்தளத்தின் கட்டமைப்புப் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ள நிலையில், இதனைப் பூர்த்தி செய்து கையளிப்பதற்கு முன்பதாக உட்புற முடிவு வேலைப்பாடுகள், பொருத்து வேலைகள், மற்றும் தொடர்புடைய நிர்மாணச் செயற்பாடுகளை CHEC தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளது. 

China Harbour Engineering Company (CHEC) நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. வாங் காங் அவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “சமூகங்களுக்கு அர்த்தமுள்ள மதிப்பைத் தோற்றுவிக்கின்ற உயர் தர உட்கட்டமைப்பு மற்றும் வீடமைப்புச் செயற்திட்டங்கள் மூலமாக இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதில் CHEC இன் அர்ப்பணிப்பை இச்சாதனை மைற்கல் பிரதிபலிக்கின்றது. குறைந்த வருமானமீட்டுகின்ற குடும்பங்களின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்துவதற்கு உதவும் அதேசமயம், சீனா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிடையே நீண்டகால அபிவிருத்திக்கான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்குப் பங்களிப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்.” 

சமூக மேம்பாடு மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தியவாறு, சீனாவின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முயற்சிகள் மத்தியில் சிக்கனமான விலைகளில் கிடைக்கும் வீடமைப்புச் செயற்திட்டம் காணப்படுகின்றது. CHEC இச்செயற்திட்டத்தில் தனது வகிபாகத்தினூடாக, தரம், காலத்திற்கேற்ற முன்னேற்றம், மற்றும் நேர்மறை சமூக விளைவு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்ற, பாரிய அளவிலான நிர்மாணச் செயற்திட்டங்களை வழங்குவதில் தனது ஆற்றலை தொடர்ந்து காண்பித்து வருகின்றது. 

மேற்தள கட்டுமானப் பணிகளின் பூர்த்தியை தொடர்ந்து எஞ்சிய பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மகரகமை தளத்தின் எஞ்சிய கட்டங்களையும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதில் CHEC தொடர்ந்து கவனம் செலுத்தியுள்ளது. இதன் மூலமாக, பரந்த வீடமைப்பு அபிவிருத்தி மூலமாக, இலங்கையில் வாழும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான, இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய, மற்றும் சிறந்த தரம் கொண்ட வாழ்விடங்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற இச்செயற்திட்டத்தின் நோக்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றது.


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara