Header Logo
Mogo Academy

வணிகம்
மாற்றம், ஊக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கான மாநாட்டில் இலங்கை முழுவதுமுள்ள டோஸ்ட்மாஸ்டர்ஸ் உறுப்பினர்கள் ஒன்றிணைந்தனர்

Jun 2, 2026 - 05:16 PM -

0

மாற்றம், ஊக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கான மாநாட்டில் இலங்கை முழுவதுமுள்ள டோஸ்ட்மாஸ்டர்ஸ் உறுப்பினர்கள் ஒன்றிணைந்தனர்
Mobitel inner

மாவட்டம் 82 டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நெஷனல் [District 82 Toastmasters International] தனது முக்கிய வருடாந்த மாநாடான Ovation 2026 ஐ மே 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் வெற்றிகரமாக நிறைவு செய்தது. “மாற்றத்தின் அலைகள்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த இருநாள் நிகழ்வு, இலங்கை மற்றும் பரந்த பிராந்தியத்திலிருந்து தொடர்பாளர்கள், தலைவர்கள், தொழில்முறை நிபுணர்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்களை ஒன்றிணைத்தது. அண்மைக்கால ஆண்டுகளில் மாவட்டம் கண்ட மிகுந்த உற்சாகமூட்டும் ஒன்றுகூடல்களில் இதுவும் ஒன்றாக இருந்ததாக பல பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டனர். 

உலகளவில் மிகச் சிறப்பாக செயல்படும் டோஸ்ட்மாஸ்டர்ஸ் மாவட்டங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மாவட்டம் 82, இலங்கை, மாலைத்தீவு மற்றும் பிரித்தானிய இந்து சமுத்திரப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. DTM மரியோ டீ சில்வா தலைமையில் நடைபெற்ற Ovation 2026, தொடர்புத்திறன், தனிநபர் வளர்ச்சி மற்றும் தலைமைத்திறன் சிறப்புகளை கொண்டாடும் மாவட்டத்தின் முக்கிய தளமாக அமைந்தது. இந்த மாநாட்டிற்கு ஹோம் லாண்ட்ஸ் ஆதரவளித்ததுடன், ஜனதா ஸ்டீல்ஸ் , நெஸ்லே, மலிபன் பிஸ்கட் மனுபக்சரிங்ஸ், A J மெடிச்செம் இன்டர்நெஷனல் , நியூ அன்டனிஸ் பார்ம்ஸ், ஜவேஸ் இன்டர்நெஷனல் மற்றும் சொரோ டேப்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும் கூட்டாண்மை பங்குதாரர்களாக திகழ்ந்தன. 

இந்த மாநாடு, ரோட்டரி இன்டர்நெஷனல் [Rotary International] அமைப்பின் முன்னாள் தலைவரான K R ரவீந்திரனின் முக்கிய உரையுடன் தொடங்கியது. அவர், பண்புகளை அடிப்படையாகக் கொண்ட தலைமைத்துவம் மற்றும் இன்றைய உலகில் நேர்மையின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். 

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகளில், ரசினி பண்டாரா மனவலிமை மற்றும் மீள்வுத் திறன் குறித்து பேசினார்; மிசெல் டி சில்வா உண்மைத்தன்மை மற்றும் இலக்கை நோக்கிய தலைமைத்துவம் குறித்து தாக்கமிக்க அமர்வுகளை நடத்தினார்.“டிஜிட்டல் காலத்தில் மனிதத் தொடுதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற குழு விவாதத்தில், DTM காயத்ரி லியனகே தலைமையில் சனாலி கௌஷல்யா, மேவன் பீரிஸ் மற்றும் சஞ்சய எல்விட்டிகல ஆகியோர் கலந்துகொண்டு, தொழில்நுட்பம் அதிகமாக ஆதிக்கம் செலுத்தும் உலகில் பரிவுடன் வழிநடத்துவதன் அர்த்தத்தை ஆராய்ந்தனர். 

இரண்டாம் நாள், இலங்கையின் பிரபல இசை இரட்டையர்களான பாத்தியா மற்றும் சந்துஷுடன் நடைபெற்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உரையாடலால் சிறப்பிக்கப்பட்டது. DTM கல்பனா டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், தனிப்பட்ட வர்த்தகநாமம் , தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளுதல் மற்றும் வேகமாக மாறும் உலகில் தொடர்புடையவராகத் திகழ்வது குறித்து விவாதிக்கப்பட்டது. 

“ஒவ்வொரு அலையும் – உயர்வதற்கான ஒரு வாய்ப்பு” என்ற தலைப்பில் ஸ்டெஃபனி சிறிவர்தன வழங்கிய நிறைவு உரையுடன் மாநாடு சிறப்பாக நிறைவுற்றது. அவர், பங்கேற்பாளர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கைகளில் மாற்றத்தையும் வாய்ப்புகளையும் தழுவிக்கொள்ள ஊக்குவித்தார். 

Ovation 2026 மாநாட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக மாவட்டம் 82 சர்வதேச பேச்சுப் போட்டி மற்றும் Table Topics போட்டியின் இறுதிச்சுற்றுகள் அமைந்தன. இவை மாவட்டத்தின் சிறந்த பேச்சாளர்களின் திறமைகளை வெளிப்படுத்தின.திடீர் தலைப்புகளில் கட்டுப்பாடுடனும் தெளிவுடனும் உடனடி பதில்களை வழங்கும் திறனைச் சோதிக்கும் திடீர் தலைப்புகள் போட்டியில், தினால் எதிரிசிங்க முதல் இடத்தைப் பெற்றார். பர்ஹாஸ் பாரூக் இரண்டாம் இடத்தையும், ரிஷ்யேந்தன் தீனபந்த் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.சர்வதேச பேச்சுப் போட்டியில், ரவி உடுவெல முதலிடத்தை வென்றார். சனாரா பிரேமரத்ன இரண்டாம் இடத்தையும், அஷின்சானி வீரசிங்க மூன்றாம் இடத்தையும் பெற்றனர். ரவி உடுவெல தற்போது பிராந்திய காலிறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று, உலக பொதுப் பேச்சு சாம்பியன்ஷிப் மேடையை நோக்கி மேலும் ஒரு படி முன்னேறியுள்ளார். 

இந்த மாநாடானது , 2026/27 டோஸ்ட் மாஸ்டர்ஸ் ஆண்டிற்கான புதிய மாவட்டம் 82 தலைமைத்துவக் குழுவின் பதவியேற்பையும் குறிக்கும் வகையில் அமைந்திருந்தது . மாவட்டபணிப்பாளர் பாத்தியா ஹெட்டியாரச்சி, DTM; நிகழ்ச்சி தர பணிப்பாளர் பியாகர ஜயரத்ன, DTM; மற்றும் கழக வளர்ச்சி பணிப்பாளர் ஹிங்ஸ்டன் லவல், DTM ஆகியோர், முன்னாள் சர்வதேச தலைவரான பால்ராஜ் அருணாசலம் தலைமையில் நடைபெற்ற விழாவில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக்கொண்டனர்.நிகழ்ச்சி முழுவதும், கல்விசார் சிறப்பு, வழிகாட்டுதல் மற்றும் டோஸ்ட் மாஸ்டர்ஸ் இயக்கத்திற்கான சேவைகளில் அளித்த பங்களிப்புகளுக்காக சிறந்த கழகங்கள், தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர். 

கூட்டத்தினரிடம் உரையாற்றிய பதவி விலகும் மாவட்டப்பணிப்பாளர் நிரோஷன் நடராஜா, DTM, ஒற்றுமையான முயற்சியும் நோக்கமுள்ள செயல்பாடுகளும் நிரம்பிய ஒரு ஆண்டை நினைவுகூர்ந்தார்.“மாற்றம் என்பது தனிமையில் நிகழ்வதல்ல. மக்கள் ஒன்றுகூடி, கற்றுக்கொண்டு, ஒருவரை ஒருவர் உயர்த்தத் தேர்வு செய்யும் போது அது நிகழ்கிறது. அதுவே மாவட்டம் 82 எப்போதும் நிலைநிறுத்தி வந்த பெறுமதியாகும்; அதையே Ovation 2026 மீண்டும் ஒருமுறை அழகாக வெளிப்படுத்தியுள்ளது,” என்று அவர் தெரிவித்தார். 

இந்த மாநாடு நட்புறவுகளும் தொடர்பு வலையமைப்புகளும் உருவாகிய சூழலில் நிறைவுற்றது. இதன் மூலம், தன்னம்பிக்கையுள்ள தொடர்பாளர்களையும் திறமையான தலைவர்களையும் உருவாக்கும் டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நெஷனல் அமைப்பின் நீடித்த பணி மேலும் வலுப்படுத்தப்பட்டது. மேலும், இலங்கை மற்றும் அதற்கு அப்பாலான சமூகங்களிலும் தொழில்துறைகளிலும் இந்த இயக்கம் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் நிலையான தாக்கமும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. 

டோஸ்ட்மாஸ்டர்ஸ் என்பது உலகளாவிய ரீதியில் இலாபநோக்கற்ற அமைப்பாகும். இது கட்டமைக்கப்பட்ட கற்றல் வழிமுறைகள், பேச்சு வாய்ப்புகள் மற்றும் ஆக்கபூர்வமான பின்னூட்டங்கள் மூலம் தனிநபர்கள் தங்களின் பொதுப் பேச்சு, தொடர்புத்திறன் மற்றும் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்த உதவுகிறது. இணைய விரும்பும் யாரும் டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நெஷனலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களுக்கான உள்ளூர் கழகத்தை கண்டறியலாம். புதிய உறுப்பினர்கள் எப்போதும் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள்.


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara