Jun 2, 2026 - 07:02 PM -
0
நீர் கட்டணம் மிகச் சிறிய அளவில் உயர்த்தப்படும் என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (02) நடைபெற்ற நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் சுசில் ரணசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணங்கள் உயர்வதற்கு ஏற்ப இந்தக் கட்டணங்களும் உயரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க,
"மின்சாரக் கட்டண உயர்வை பார்க்கும் போது, அது நீர்க் கட்டணத்தில் 12% ஐ மட்டுமே உள்ளடக்கியுள்ளது. 12% என்பது 18% ஆக அதிகரித்துள்ளது என்று நான் நினைக்கிறேன். நீர் கட்டணம் அதிகரிக்குமா இல்லையா என்று மக்கள் கேட்கிறார்கள்...12% இல் 18% தான் ஒவ்வொரு யூனிட்டிற்கும் மாறலாம்... அது மிகச் சிறிய தொகை. இப்படித்தான் இந்த மின்சாரக் கட்டண ஏற்ற இறக்கம் நீர்க் கட்டணத்தைப் பாதிக்கிறது."

