Jun 3, 2026 - 11:53 AM -
0
தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பரந்த அளவிலான டிஜிட்டல் மற்றும் AI சார்ந்த வணிகத் தீர்வுகளைக் காட்சிப்படுத்தும் நோக்கில், SLT-MOBITEL Enterprise அண்மையில் கண்டி, Oak Ray Regency இல் ‘SmartChat Mega – Kandy’ நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியிருந்தது. இவ்வருட ஆரம்பத்தில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் வெற்றிகரமான தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘SmartChat Mega – Kandy’ நிகழ்வு, வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழலில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் மேம்படுவதற்குத் தேவையான கருவிகள் மற்றும் நிபுணத்துவ அறிவைக் கொண்டு அவர்களை தொடர்ந்து வலுவூட்டியது.
இதன்போது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களின் வணிகத் திறனை வெளிக்கொணர்வதற்கும், நிலையான வளர்ச்சிக்கான புத்தாக்கங்களை உள்வாங்கித் தங்களின் செயல்பாடுகளை எதிர்காலத்திற்கு உகந்ததாக மாற்றுவதற்கும் ஏதுவான பிரத்தியேக தீர்வுகள் மற்றும் நுண்ணறிவுகளை SLT-MOBITEL வழங்கியிருந்தது. இந்நடவடிக்கை, உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதில் SLT-MOBITEL கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை தெளிவாகப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.
விசேட விருந்தினர்கள் அடங்கலாக 200 க்கும் அதிகமான சிறு மற்றும் நடுத்தர நிறுவன வாடிக்கையாளர்கள் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனர் எனும் SLT‑MOBITEL இன் நிலையையும், இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் டிஜிட்டல் மாற்றியமைப்பிற்கான திறவுகோலாக தனது நிலையையும் இந்நிகழ்வு உறுதி செய்திருந்தது.
கண்டி நகரில் நடைபெற்ற இந்நிகழ்வு, கணக்கு முகாமையாளர்களுடனான தனிப்பட்ட ஆலோசனைகள் மற்றும் மொபிடெல் உள்ளிட்ட எட்டு காட்சிகூடங்களுக்கான வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றின் ஊடாக, நிபுணத்துவ அறிவை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கான பிரத்தியேக வாய்ப்பினை பங்கேற்றவர்களுக்கு வழங்கியிருந்தது. ஒவ்வொரு மையத்தினூடாகவும் cloud, IoT, enterprise mobility, secure business platforms மற்றும் collaboration tools ஆகியவற்றை உள்வாங்கி சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு பிரயோக தீர்வுகளை வழங்கப்பட்டிருந்தது.
SLT-MOBITEL இன் நிபுணத்துவம் வாய்ந்த பொறியியலாளர்கள் மற்றும் தீர்வுகளுக்கான விசேட நிபுணர்களை நேரடியாக அணுகியதன் மூலம், எளிய முறையில் தொழில்நுட்பத்தை உள்வாங்குதல், செலவீனங்களைக் குறைத்தல், வணிக வளர்ச்சி மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் ஆகியவற்றுக்கான நடைமுறை வழிகாட்டல்களை சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் கண்டறிந்தன. இன்றைய டிஜிட்டல் பொருளாதாரத்தில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பம், எவ்வாறு வணிகத் திறனை வெளிக்கொணரவும், செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் உதவும் என்பதை இந்நிகழ்வு வெளிப்படுத்தியிருந்தது.

