Header Logo

செய்திகள்
டெல்லியில் உணவு விடுதியில் தீ விபத்து - 21 பேர் உயிரிழப்பு!

Jun 3, 2026 - 12:46 PM -

0

டெல்லியில் உணவு விடுதியில் தீ விபத்து - 21 பேர் உயிரிழப்பு!

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். 

காலை 9.40 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது. 

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது. 

இதுவரை 40 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலியானவர்களில் பலர் மத்திய ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கின்றது. 

இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. 

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்த நபர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் வழங்குவார்கள் என எக்ஸ் கணக்கில் பதிவிட்டு உள்ளார். 

பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு அளிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

MOST READ

காணொளி
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

title