Header Logo

செய்திகள்
முதியோர் இல்லத் துயரம்: தீக்குள் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்!

Jun 3, 2026 - 10:16 PM -

0

முதியோர் இல்லத் துயரம்: தீக்குள் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்!

ஹொரணை, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றில் இன்று (3) பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் போது, அங்கு 72 முதியவர்கள் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாகச் செயற்பட்ட நிவாரணச் சேவையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட கடும் போராட்டத்திற்குப் பின்னர், தற்போது தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்போது, 44 முதியவர்களை எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்பதற்குப் பொலிஸாரும் நிவாரணக் குழுவினரும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இருப்பினும், இந்தத் தீ விபத்தின் காரணமாகக் காயமடைந்த 8 பேர் உடனடியாக ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த வளாகத்தில் இருந்த 11 பேர் காணாமல் போயிருந்த நிலையில், அவர்களைத் தேடும் பணிகளின் போது அதில் சிலரது சடலங்கள் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ஹொரணை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title