Header Logo

வடக்கு
யாழ் - நாகர்கோவில் காட்டுப்பகுதியில் குஷ் போதைப்பொருள் மீட்பு!

Jun 4, 2026 - 11:59 AM -

0

யாழ் - நாகர்கோவில் காட்டுப்பகுதியில் குஷ் போதைப்பொருள் மீட்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் தொகையான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நெல்லியடி விசேட அதிரடிப் படையினரின் (STF) பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தேடுதல் வேட்டையின் போதே போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

நாகர்கோவில் கிழக்கு பகுதியின் காட்டுப் பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து, நெல்லியடி விசேட அதிரடிப் படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து அந்தப் பகுதியை முற்றுகையிட்டுத் தீவிர தேடுதல் நடத்தினர். 

இதன்போது, அங்கு மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த, சர்வதேச சந்தையில் அதிக பணப் பெறுமதியைக் கொண்ட ‘குஷ்’ போதைப்பொருள் அடங்கிய பொதியை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட போதைப்பொருளின் மொத்த நிறை மற்றும் அதன் துல்லியமான சந்தைப் பெறுமதி என்பவற்றை மதிப்பிடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இச்சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title