Header Logo

செய்திகள்
மாயமான 2.5 மில்லியன் டொலர் தொடர்பான அறிக்கை நிதிப் பற்றிய குழுவுக்கு

Jun 4, 2026 - 06:56 PM -

0

மாயமான 2.5 மில்லியன் டொலர் தொடர்பான அறிக்கை நிதிப் பற்றிய குழுவுக்கு

அவுஸ்திரேலிய நிறுவனமொன்றிற்கு செலுத்தப்படவிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை இணைய மோசடியாளர்களின் கைக்குச் சென்றமை தொடர்பான பொது திறைசேரியின் அறிக்கை, அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்ற குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த குழு இன்று (04) கூடிய போது, அந்த அறிக்கையை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 

இந்த அறிக்கையை பரிசீலித்து, அடுத்த வாரம் இது தொடர்பாக நிதிச் செயலாளருடன் கலந்துரையாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேலும் கூறினார். 

பொது திறைசேரியினால் இந்த அறிக்கை அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போது, அவர் அதனைப் பொறுப்பேற்க மறுத்து நேற்று (03) திருப்பி அனுப்பியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. 

குறித்த அறிக்கையை தனது வீட்டிற்கு அல்லாமல் பாராளுமன்றத்திற்கே சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறி அவர் அதனைத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title