Jun 4, 2026 - 07:53 PM -
0
தற்போதைய நிதிக் கொள்கை மற்றும் அது சார்ந்த விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்றை இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்துள்ளது.
தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த விடுத்த கோரிக்கைக்கு அமையவே இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட மத்திய வங்கி அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்த வேலைத்திட்டம் இம்மாதம் 10ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக, கடந்த முதலாம் திகதி கூடிய, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

