Header Logo

செய்திகள்
பேரிடர்களில் ஒன்றிணைவதைப் போல் நாட்டிற்காகவும் இணைய வேண்டும்

Jun 4, 2026 - 10:09 PM -

0

பேரிடர்களில் ஒன்றிணைவதைப் போல் நாட்டிற்காகவும் இணைய வேண்டும்

பேரிடர்களின் போது இலங்கையர்களாக, ஒன்றிணைவதைப் போல் நாட்டிற்காகவும் நாம் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். 

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடந்த தேசிய சமாதான பேரவையின் 2026 வருடாந்த சர்வமத மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

அண்மைய ஐந்து வருட காலத்திற்குள் பல்வேறு சோகச் சம்பவங்களை எதிர்கொண்ட நமது நாட்டு மக்களுக்கு இப்போது மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கத்தாலும் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. 

இந்த சவால்களை எதிர்கொண்டு நாட்டை வலுப்படுத்த வேண்டிய தருணம் எம்முன்னால் காணப்படுகின்றன. 

எல்லா வகைகளிலும் சமூகத்தை வலுப்படுத்த வேண்டிய தேவைப்பாடு எமக்கு காணப்படுகின்றன. 

அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக வலுப்படுத்துவதோடு மட்டும் நின்று விடாது, சமூகத்தில் உருவாகும் சிக்கலான நிலைமைகளை தீர்க்க மனித இனம் கைக்கொண்ட உயர்ந்த நிலையிலான பிரச்சினைகளைத் தீர்க்கும் முறைகள் தொடர்பில் மக்களை அறிவூட்ட வேண்டும். 

சமாதானமாகவும் ஐக்கியத்துடனும் புரிதலுடனும் நடந்து கொள்வது குறித்து மக்களை வலுப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

பல்வேறு சமூகப் பிரிவினர்களினது சமூக பின்னணிகளுக்கும், மதங்களுக்கும், கலாசாரங்களுக்கும் உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு வழங்க வேண்டிய அங்கீகாரத்தை உரியவாறு வழங்க வேண்டும். 

பரஸ்பர புரிதலுடன் நடந்து கொள்ள வேண்டும். நமது நாட்டின் அரசியலமைப்பின் உச்ச சட்டத்தில் நாம் அனைவரும் சமத்துவமானவர்கள் என குறிப்பிடப்படும்போது, அதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 

9 மாகாணங்கள் 25 மாவட்டங்களிலும் வாழும் பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த மக்கள் நட்புறவையும், சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் முன்னிலைப்படுத்தி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

ஒவ்வொரு குடிமகனையும் சமத்துவமாக நடத்த வேண்டும். பல்வேறு மொழிகள் பேசும், பல்வேறு மதங்களை விசுவாசம் கொள்ளும் அனைவருக்கும் உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுக்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். 

எங்கு வாழ்ந்தாலும், அனைவரின் இதயங்களிலும் ஒன்றாக வாழும் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் அனைவருக்கும் சௌபாக்கியத்தை உதயமாக்கும், அனைவரையும் இணைத்துக் கொண்ட பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

எந்த கருத்தை நாம் கொண்டிருந்தாலும் பேரிடர்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் இலங்கையர்களாக ஒன்றிணைவதைப் போல் நாட்டிற்காகவும் நாம் ஒன்றிணைவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title