Header Logo

செய்திகள்
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானிக்கும், ஜ.நா பிரதிநிதிக்கும் இடையே சந்திப்பு

Jun 4, 2026 - 10:29 PM -

0

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானிக்கும், ஜ.நா பிரதிநிதிக்கும் இடையே சந்திப்பு

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையிலுள்ள வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்- அண்ட்ரே பிரேன்சேவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பானது இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 

இலங்கைக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் நிலவும் நீண்டகால மனிதாபிமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

'டித்வா' புயலுக்கு பின்னர் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு இணையாக மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணிகள் குறித்தும், 2025 டிசம்பர் முதல் 2026 ஏப்ரல் வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்ட மனிதாபிமான முன்னுரிமைகள் திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. 

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளான அஸாம் பாக்கீர் மாக்கார் (Azam Bakeer Marker), வகீஷ பெரேரா மற்றும் டி.சி.எம்.என்.ஆர்.டி. குரே (TCMNRT Cooray) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title