Header Logo

இந்தியா
ஐதராபாத்தில் 3 பேருக்கு எபோலா நோய் அறிகுறி!

Jun 5, 2026 - 10:00 AM -

0

ஐதராபாத்தில் 3 பேருக்கு எபோலா நோய் அறிகுறி!

இந்தியாவின் ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் இன்று (05) அதிகாலை எபோலா அறிகுறிகளுடன் 2 பேர் இனங்காணப்பட்டனர். அவர்களை பரிசோதித்த வைத்தியர்கள் ஆரம்பகட்ட அறிகுறிகளின் அடிப்படையில் அவர்களுக்கு எபோலா இருக்கலாம் என சந்தேகித்தனர். 

பாதிக்கப்பட்டவர்கள் சிறந்த சிகிச்சை மற்றும் சிறப்பு கண்காணிப்பிற்காக உடனடியாக காந்தி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். 

இதற்கிடையில், நேற்று (04) இதேபோன்ற அறிகுறிகளுடன் மற்றொரு நபரும் காந்தி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. 

காந்தி வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் 3 சந்தேக நபர்களும் அதே விமானத்தில் வெளி நாட்டிலிருந்து ஐதராபாத் வந்தடைந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட 3 பேரும் ஒரே விமானத்தில் பயணித்தது தெரியவந்ததை அடுத்து, வைத்திய நிபுணர்களும் விமான நிலைய அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். 

குறிப்பிட்ட அந்த விமானத்தில் பயணித்த மற்ற பயணிகளின் விவரங்களைச் சேகரிப்பதில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. 

ஐதராபாத்தில் எபோலா வைரஸ் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

MOST READ

காணொளி
வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

title