Header Logo

இந்தியா
புதிய அரசியல் இயக்கம் - அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

Jun 5, 2026 - 01:02 PM -

0

புதிய அரசியல் இயக்கம் - அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த 03 ஆம் திகதி டெல்லி சென்று தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து 5 பக்க கடிதத்தையும் அளித்தார். தொடர்ந்து, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷையும் அவர் சந்தித்து பேசினார். 

இதற்கிடையே, அண்ணாமலையின் இராஜினாமாவை பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றதாக பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் அறிவித்துள்ளார். மேலும் பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகும் அண்ணாமலையின் முடிவும் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை சமூக வலைதளம் மூலம் நேரலையில் மக்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது, 

தமிழக மக்களுக்காக பணியாற்ற 6 ஆண்டுகள் அமைந்தது பெரிய பாக்கியம் என நான் கருதுகிறேன். புதிய அரசியலை மாற்றியமைக்கும் அடிப்படையில் பாஜகவில் இருந்து வெளியேறுகிறேன். 

25 வயதில் கேப்டன் விஜயகாந்தின் கட்சியில் இன்டன்ஷிப் செய்ய கிடைத்தது எனது பாக்கியம். ரஜினியுடன் நல்ல நட்பில் இருந்தேன். டெல்லியில் இருந்து வந்து புதிய இயக்கத்தில் இணைய ரஜினி அறிவுறுத்தினார். 

பாஜகவில் இருந்தபோது ஒருபோதும் நான் தமிழகத்தின் நலனை விட்டுக்கொடுத்ததில்லை. தமிழனா இந்தியனா என்று என்னை பலரும் கேள்வி கேட்பர், பெருமைமிகு இந்தியன் நான், பாரம்பரிய தமிழன் நான். 

இந்தியன் என்கின்ற அடையாளத்துடன் பெருமைமிகு தமிழனாகவே நான் இருக்கிறேன். புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன். 

தமிழ்நாட்டின் அடையாளத்தை ஒருபோதும் நான் விட்டுக்கொடுத்தது கிடையாது. தமிழ்நாட்டின் அடையாளத்தோடு பாஜக இருக்க வேண்டும் என விரும்பினேன். 

18 ஆண்டுகளாக புதிய பாதையை உருவாக்க போராடி கொண்டிருக்கிறேன். மீத்தேன், நிலக்கரி சுரங்கம், மேகதாது உள்ளிட்ட அனைத்திலும் தமிழக உரிமையை விட்டுக்கொடுத்தது கிடையாது. 

டிசம்பர் 4 ஆம் திகதியே பாஜகவில் இருந்து விலகுவதை தெரிவித்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

 


MOST READ

காணொளி
வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

title