Header Logo

செய்திகள்
3 சந்தேகநபர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்!

Jun 5, 2026 - 06:33 PM -

0

3 சந்தேகநபர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்!

மீகொடை பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய, தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 

ஹைலெவல் வீதியின் மீகொடை சந்திக்கு அருகில், கெப் ரக வாகனத்தை ஓட்டிவந்த சாரதி ஒருவர், தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். 

இச்சம்பவத்தில் 06 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 07 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மீகொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இதன்படி, விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டு, ஜூன் 01ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

எனினும், விபத்து நடந்த நேரத்தில் சாரதியுடன் மேலும் மூன்று நபர்கள் வாகனத்தில் பயணித்துள்ளதாகவும், சாரதி கைது செய்யப்படும்போது அந்த மூவரும் கெப் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பியோடி உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்த மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்வதற்காக 02 பொலிஸ் விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களை அடையாளம் காண்பதற்கே பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 

01வது சந்தேகநபரின் விபரங்கள்: 

பெயர்: அத்தநாயக்ககே தொன் வசந்த 

முகவரி: இல. 243/டி, குடமாதுவ, சித்தமுல்ல, பிலியந்தல (இவர் கெப் வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் ஆவார்) 

02வது சந்தேகநபரின் விபரங்கள்: 

பெயர்: எஸ்.கே. குமார என்ற செல்லமுத்து செல்லக்குமார் 

முகவரி: இல. 342/டி, பெலன்வத்த, பன்னிபிட்டிய 

03வது சந்தேகநபரின் விபரங்கள்: 

பெயர்: தொன் சரத் ஹெட்டிகே 

முகவரி: இல. 337/07, பெலன்வத்த, பன்னிபிட்டிய 

எனவே, குறித்த சந்தேகநபர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். 

தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 

நிலையப் பொறுப்பதிகாரி (OIC) - மீகொடை பொலிஸ் நிலையம்: 071-8592179 

போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி - மீகொடை பொலிஸ் நிலையம்: 077-9494188

 

 


MOST READ

காணொளி
வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

title