Header Logo

வணிகம்
செலான் வங்கி, பிரத்தியேக லீசிங் தீர்வுகள் மூலம் மின்சார வாகன உரிமையை ஊக்குவிக்கும் நோக்கில் Hayleys Fentons Limited உடன் கைகோர்த்துள்ளது

Jun 8, 2026 - 04:32 PM -

0

செலான் வங்கி, பிரத்தியேக லீசிங் தீர்வுகள் மூலம் மின்சார வாகன உரிமையை ஊக்குவிக்கும் நோக்கில் Hayleys Fentons Limited உடன் கைகோர்த்துள்ளது

செலான் வங்கி பிஎல்சி, Hayleys Fentons Limited உடன் மூலோபாயக் கூட்டாண்மையில் இணைந்து மின்சார வாகனங்களை (EV) கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கான பிரத்தியேக லீசிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையில் நிலைத்தன்மையான மற்றும் பசுமைப் போக்குவரத்துத் தீர்வுகளை ஊக்குவிக்கும் வங்கியின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக இந்த கூட்டாண்மை அமைகிறது. 

இவ் இணைவு ஊடாக, Hayleys Fentons Limited ஆல் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் JAECOO, OMODA, KAIYI மற்றும் SRM உள்ளிட்ட மின்சார வாகன வர்த்தக நாமங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், செலான் வங்கியின் பிரத்தியேக லீசிங் சலுகைகளைப் பெறவுள்ளனர். இதில் போட்டித்தன்மை வாய்ந்த வட்டி வீதங்கள், 7 ஆண்டுகள் வரையிலான திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் மற்றும் 24 மணி நேரத்திற்குள் விரைவுபடுத்தப்பட்ட ஒப்புதல்கள் உள்ளிட்ட நன்மைகள் அடங்கும். 

வாடிக்கையாளர்களுக்கு எளிமையானதும் சௌகரியமானதுமான வாகன நிதி அனுபவத்தை வழங்குவதோடு, சுற்றுச்சூழலுக்கு பொறுப்புணர்வான போக்குவரத்துக்கான நாட்டின் அதிகரித்து வரும் மாற்றத்தையும் இந்த ஒத்துழைப்பு ஆதரிக்கிறது. இலங்கையில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், நெகிழ்வான மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட நிதித் தீர்வுகள் வழியாக நிலைத்தன்மை மிக்க வாகன உரிமையை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். 

இந்த இணைவு குறித்துக் கருத்துத் தெரிவித்த செலான் வங்கி பிஎல்சியின் தனிநபர் வங்கிப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் யூஜின் செனவிரத்ன, “பசுமை நிதி (Green Financing) முயற்சிகளை விரிவுபடுத்துவதோடு, வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பையும் வசதியும் வழங்குவதற்கான வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த ஒத்துழைப்பு பிரதிபலிக்கிறது. வாழ்க்கை முறை மற்றும் போக்குவரத்துத் துறைகளில் உருவாகி வரும் புதிய போக்குகளுக்கு ஆதரவளிக்கும் புதுமையான நிதித் தீர்வுகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துவோம்.” என்றார். 

Hayleys குழுமத்தின் (Hayleys PLC)) முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக்க இது தொடர்பாக கூறுகையில், செலான் வங்கியுடனான இக் கூட்டாண்மை, உயர்தர மின்சார வாகனங்களை இலங்கை நுகர்வோருக்கு மேலும் எளிதில் கிடைக்கச் செய்வதோடு, கவர்ச்சிகரமான நிதி வசதிகளையும் திறம்பட்ட சேவை அனுபவத்தையும் ஒருங்கிணைக்கும் எனக் குறிப்பிட்டார். 

இந்த வசதியின் ஒரு பகுதியாக, செலான் வங்கியின் பிரத்தியேக லீசிங் குழுவின் ஆதரவையும் வாடிக்கையாளர்கள் பெறவுள்ளனர். இக் குழு, லீசிங் நடைமுறை முழுவதும் வீட்டிற்கே வந்து உதவி மற்றும் இலவச ஆலோசனை சேவைகளை வழங்கும். மேலும், நாடெங்கிலும் உள்ள செலான் வங்கியின் பரந்த கிளை வலையமைப்பின் ஆதரவுடன், ஆவணங்கள், ஒப்புதல்கள் மற்றும் லீசிங்கிற்கு பிந்தைய சேவைகள் குறித்த வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு, ஆரம்பம் முதல் இறுதி வரை தடையற்ற அனுபவம் உறுதி செய்யப்படும். 

நிதிச் சேவைத் துறையில் புதுமைகளை முன்னெடுத்து வரும் செலான் வங்கியின் தொடர்ச்சியான பயணத்தில் இந்த கூட்டாண்மை மேலும் ஒரு முக்கிய முன்னேற்றமாக அமைவதுடன் தூய்மையான மற்றும் நிலைத்தன்மை மிக்க போக்குவரத்துக்கான இலங்கையின் மாற்றப் பயணத்திற்கும் வலுசேர்க்கிறது. 

மேலதிக தகவல்களுக்கு, வாடிக்கையாளர்கள் செலான் வங்கியின் விசேட தொலைபேசி இலக்கமான 011 200 88 88 ஐத் தொடர்பு கொள்ளலாம்.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

title