Header Logo

வணிகம்
சுகாதாரத் துறையின் இலாப வரம்பு அழுத்தங்களைச் சமாளித்து, 2026 நிதியாண்டில் 11.2% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள Sunshine Holdings

Jun 8, 2026 - 04:40 PM -

0

சுகாதாரத் துறையின் இலாப வரம்பு அழுத்தங்களைச் சமாளித்து, 2026 நிதியாண்டில் 11.2% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள Sunshine Holdings

பன்முகப்படுத்தப்பட்ட வணிகங்களைக் கொண்ட இலங்கையின் கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, 2026 மார்ச் 31 உடன் முடிவடைந்த நிதியாண்டில் 65.9 பில்லியன் ரூபாயை ஒருங்கிணைந்த வருவாயாகப் பதிவு செய்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 11.2% வருடாந்த (YoY) வளர்ச்சியாகும். சுகாதாரத் துறையின் தொடர்ச்சியான விரிவாக்கம், நுகர்வோர் துறையின் மேம்பட்ட வேகம் மற்றும் விவசாய வணிகத்தின் பலத்த பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் இந்த வளர்ச்சி சாத்தியமானது. சுகாதாரத் துறையில் ஏற்பட்ட குறிப்பிட்ட இலாப வரம்பு அழுத்தங்கள் காரணமாக நிறுவனத்தின் இலாபத்தன்மை பாதிக்கப்பட்ட போதிலும், குழுமம் ஒட்டுமொத்தமாக ஒரு நிலையான செயல்பாட்டுத் திறனைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இது நிறுவனத்தின் பன்முகப்படுத்தப்பட்ட வணிகக் கட்டமைப்பின் பின்னடைவை பிரதிபலிக்கிறது. 

சுகாதார துறை குழுமத்தின் வருவாயில் தொடர்ந்து அதிக பங்களிப்பை வழங்கியதுடன், 2026 நிதியாண்டில் (FY26) ஒருங்கிணைந்த வருவாயில் 56.8% பங்கைக் கொண்டிருந்தது. நுகர்வோர் மற்றும் விவசாய வணிகத் துறைகள் முறையே குழும வருவாயில் 28.9% மற்றும் 14.3% பங்களிப்பை வழங்கின. இது சுகாதர துறை, நுகர்வோர் பொருட்கள் மற்றும் விவசாயம் சார்ந்த வணிகங்களில் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பன்முகப்படுத்தப்பட்ட துறைசார் இருப்பைப் பிரதிபலிக்கிறது. 

குழுமத்தின் மொத்த இலாபம் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 6.7% அதிகரித்து 19.0 பில்லியன் ரூபாயாக உயர்ந்தது. எனினும், 2025 நிதியாண்டின் (FY25) 30.1%-உடன் ஒப்பிடுகையில், மொத்த இலாப வரம்பு 28.9 ஆகக் குறைந்தது. வட்டி மற்றும் வரிக்கு முந்தைய வருவாய் (EBIT) 9.3 பில்லியன் ரூபாயாக நிலையாக இருந்தது, ஆனால் அதன் வரம்பு நிதியாண்டு 2025இன் 15.7% உடன் ஒப்பிடும்போது 14.1% ஆகக் குறைந்தது. இந்த ஆண்டிற்கான நிகர இலாபம் (PAT) 5.0 பில்லியன் ரூபாயாக இருந்தது, இது ஆண்டுக்கு ஆண்டு 2.5% சிறிய வீழ்ச்சியாகும். இந்த இலாபக் குறைவிற்கு முக்கிய காரணம் சுகாதார துறையில் ஏற்பட்ட இலாப வரம்பு நெருக்கடியாகும். இதில் மருந்துப் பொருட்களுக்கான NMRA விலை மாற்றங்களின் தாக்கம் மற்றும் அரசு கொள்முதல் கட்டளைகளுக்கான குறைந்த விலைகளும் அடங்கும். மேலும், துணை நிறுவனங்களிடமிருந்து தாய் நிறுவனத்திற்கு வழங்கப்படும் ஈவுத்தொகை மீதான பிடித்த வரி (WHT), குழுமத்தின் பங்கு மூலதன மாற்ற அறிக்கைக்குப் பதிலாக, வரிச் செலவினங்களின் ஒரு பகுதியாக மாற்றி வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 2026 நிதியாண்டு, அதன் இறுதி காலாண்டு மற்றும் 2025 நிதியாண்டுக்கான ஒப்பீட்டு வரிச் செலவுத் தரவுகள் இந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிதியாண்டில், குழுமம் Joint Agri Products Ceylon (Private) Limited (JAPC) நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது. இந்நிறுவனம் முக்கியமாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கு வாசனைப் பொருட்கள், தெங்கு சார்ந்த பொருட்கள் மற்றும் தேயிலை ஆகியவற்றை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இந்த முதலீடு சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நுகர்வோர் சந்தை இருப்பை வலுப்படுத்துவதுடன், மதிப்பு கூட்டப்பட்ட ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை நோக்கிய குழுமத்தின் நீண்டகால நோக்கத்திற்கு ஆதரவளிக்கிறது. 

முடிவுகள் குறித்து சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம் கூறுகையில், “2026 நிதியாண்டு சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு ஒரு நெகிழ்ச்சியான வளர்ச்சி ஆண்டாகும். குறிப்பிட்ட சில துறைகளில் ஏற்பட்ட இலாப நெருக்கடிகளுக்கு மத்தியிலும், குழுமம் தனது முக்கிய துறைகளில் வலுவான வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மருந்து முகவர் (pharmaceutical agency), விநியோகம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சில்லறை வணிகம் ஆகியவற்றின் சிறப்பான செயல்பாடுகளின் ஆதரவோடு, சுகாதார துறை தொடர்ந்து குழும வருவாயில் முன்னிலையில் இருந்தது. அதேவேளையில், நுகர்வோர் மற்றும் விவசாய வணிகத் துறைகளும் சாதகமான வளர்ச்சிப் பாதையைத் தக்கவைத்துக் கொண்டன. சுகாதார துறையில் ஏற்பட்ட விலை நெருக்கடியால் இலாப வரம்புகள் பாதிக்கப்பட்ட போதிலும், குழுமம் தனது நிலையான செயல்பாட்டுத் திறனைப் பாதுகாத்ததுடன், நீண்டகால வளர்ச்சிக்கான தனது தளத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது” என தெரிவித்தார். 

“நாம் முன்னோக்கிச் செல்லும்போது, சிறப்பாகச் செயல்படும் வணிகப் பிரிவுகளை மேம்படுத்துதல், உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகத் திறன்களை வலுப்படுத்துதல், மற்றும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைகளில் நமது இருப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றிலேயே எங்களது கவனம் தொடர்கிறது. JAPC நிறுவனத்தின் கையகப்படுத்தல், நமது மதிப்பு கூட்டப்பட்ட ஏற்றுமதி உத்தியை ஆழப்படுத்துவதற்கான ஒரு வலுவான தளத்தை வழங்குகிறது. அதேவேளை, சுகாதாரம், நுகர்வோர் மற்றும் விவசாய வணிகத் துறைகளில் நாங்கள் மேற்கொள்ளும் தொடர்ச்சியான முதலீடுகள், பங்குதாரர்களுக்கும் பிற தொடர்புடைய தரப்பினருக்கும் நிலையான மதிப்பை வழங்குவதற்குக் குழுமத்தை தயார்படுத்துகின்றன,” என சதாசிவம் மேலும் கூறினார். 

ஹெல்த்கெயார் 

சுகாதார துறை 2026 நிதியாண்டில் (FY26) வலுவான செயல்பாட்டை வெளிப்படுத்தியதுடன், 37.4 பில்லியன் ரூபாய் வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு (YoY) 14.9% அதிகரிப்பாகும். மருந்து முகவர் விநியோகம், சில்லறை வணிகம் மற்றும் மருத்துவ உபகரண வணிகங்களின் சிறப்பான செயல்பாடுகளே இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும். இது இத்துறையின் வலுவான செயல்பாட்டுத் தளத்தையும் மற்றும் தொடர்ச்சியான சந்தை ஊடுருவலையும் பிரதிபலிக்கிறது. 

சன்ஷைன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம், நடப்பு ஆண்டில் விற்பனை அளவு விரிவாக்கம் மற்றும் அதிக ஏற்றுமதி வருவாய் ஆகியவற்றின் காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு (YoY) 24.4% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், ஆண்டின் பிற்பகுதியில் NMRA விலை நிர்ணய முறையின் கீழ், மருந்துப் பொருட்களுக்குப் பொருந்தும் வகையில் அதிகபட்ச சில்லறை விலை குறைப்புகள் அமுல்படுத்தப்பட்டதால், இத்துறையின் இலாபத்தன்மை பாதிக்கப்பட்டது. 

Healthguard Distribution நிறுவனம், தனது வணிக மாதிரி மாற்றத்தின் முழு ஆண்டு தாக்கம் மற்றும் ஐந்து புதிய விநியோக வாடிக்கையாளர்களின் வருகை ஆகியவற்றின் ஆதரவோடு, ஆண்டுக்கு ஆண்டு (YoY) 25.2% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. Sunshine Medical Devices நிறுவனம், அதன் முக்கிய தயாரிப்புப் பிரிவுகளில் நிலவிய நிலையான தேவையின் காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு 12.3% வருவாய் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 

Lina Manufacturing நிறுவனம், 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்க கொள்முதல் கட்டளைகளின் குறைந்த விலைகள் காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு (YoY) 5.1% வருவாய் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குழுமத்தின் சில்லறை வணிகப் பிரிவான Healthguard Pharmacy, மருந்து மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரு பிரிவுகளிலும் ஏற்பட்ட மதிப்பு மற்றும் விற்பனை அளவு வளர்ச்சியின் காரணமாக 11.3% வருவாய் வளர்ச்சியை எட்டியுள்ளது. 

நுகர்வோர் 

ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தக நாம வணிகங்கள் இரண்டையும் உள்ளடக்கிய நுகர்வோர் துறை, 2026 நிதியாண்டில் (FY26) ஆண்டுக்கு ஆண்டு (YoY) 2.8% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், குழும வருவாயில் 28.9% பங்கைக் கொண்டிருந்தது. பிராண்டட் தேயிலைத் தயாரிப்புகளில் நீடித்த நிலையான தன்மையும், இனிப்புப் பண்டங்கள் (confectionery) வணிகத்தில் ஏற்பட்ட படிப்படியான மீட்சியும் இந்த வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தன. 

பிராண்டட் தேயிலை பிரிவில், நவீன வர்த்தக வழித்தடங்களின் சிறப்பான செயல்பாட்டின் ஆதரவோடு, விற்பனை அளவு ஆண்டுக்கு ஆண்டு (YoY) 8.7% அதிகரித்தது. இதன் காரணமாக வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 7.6% வளர்ச்சியடைந்தது. குழுமத்தின் முன்னணி தேயிலை பிராண்டுகளான Zesta, Watawala மற்றும் Ran Kahata ஆகியவை பொது மக்கள் சந்தை, மலிவு விலை மற்றும் தரம் ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டன. 

Gums மற்றும் Wafers தயாரிப்புப் பிரிவுகளின் வலுவான செயல்பாட்டின் காரணமாக, இனிப்புப் பண்டங்கள் (confectionery) பிரிவு ஆண்டுக்கு ஆண்டு (YoY) 8.5% வருவாய் வளர்ச்சியையும், 8.9% விற்பனை அளவு வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. விளம்பர முயற்சிகள் மற்றும் பரந்த விநியோக வழித்தடங்கள் இதற்கு ஆதரவாக இருந்தன. 

Sunshine Tea என்ற ஏற்றுமதிப் பிரிவு, மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளிலிருந்து மொத்த தேயிலை கட்டளைகளுக்கு மாறிய தயாரிப்புக் கலவை மாற்றத்தின் காரணமாக, இலங்கை ரூபாய் மதிப்பில் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 4.8% வருவாய் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், ஏற்றுமதிச் சந்தைகளில் இருந்து தொடர்ந்து நிலவிய தேவையைப் பிரதிபலிக்கும் வகையில், ஏற்றுமதி விற்பனை அளவு ஆண்டுக்கு ஆண்டு 8.1% அதிகரித்துள்ளது. 

வேளாண்மை 

வட்டவளை பிளான்டேஷன்ஸ் பிஎல்சி (CSE: WATA) மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் விவசாய வணிகத் துறை, 2026 நிதியாண்டில் (FY26) ஆண்டுக்கு ஆண்டு (YoY) 18.9% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஃபாம் ஒயில் வணிகத்தின் வலுவான செயல்பாட்டு மற்றும் நிதித் திறனே இதற்கு முக்கியக் காரணமாகும். 

ஃபாம் ஒயில் பிரிவு 2026 நிதியாண்டில் (FY26) 8.4 பில்லியன் ரூபாய் வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது அதிக விற்பனை அளவு மற்றும் மேம்பட்ட விற்பனை விலைகள் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு (YoY) 23.6% அதிகரிப்பாகும். நடப்பு ஆண்டில் ஃபாம் ஒயில் பிரிவு 30.8% இலாப வரம்புடன், 2.6 பில்லியன் ரூபாய் நிகர இலாபத்தை (PAT) ஈட்டியுள்ளது. அதேவேளை, குறைந்த பால் விற்பனை அளவு காரணமாக, பால் பண்ணை வணிகத்தின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 8.2% ஆக குறைந்து 1.1 பில்லியன் ரூபாவாக வீழ்ச்சியடைந்தது.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

title