Header Logo

வணிகம்
தனது முதன்முதல் பட்டமளிப்பு வைபவத்தை சிறப்பாக நடாத்தியுள்ள Mogo Media Academy

Jun 8, 2026 - 06:28 PM -

0

தனது முதன்முதல் பட்டமளிப்பு வைபவத்தை சிறப்பாக நடாத்தியுள்ள Mogo Media Academy

Mogo Media Academy தனது முதன்முதல் பட்டமளிப்பு வைபவத்தை 2026 ஜுன் 4 அன்று BMICH Lotus Hall மண்டபத்தில் வெகு சிறப்பாக நடாத்தியுள்ளது. இலங்கையில் படைப்பாக்கத்துறை தொழில்சார்ந்தவர்களின் அடுத்த தலைமுறையை வளர்க்கும் இந்த அக்கடமியின் மகத்துவம்மிக்க பயணத்தில் பாரிய சாதனை மைற்கல்லாக இந்நிகழ்வு மாறியுள்ளது. 

Mogo Media Academy யில் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்த முதலாவது மற்றும் இரண்டாவது தொகுதி மாணவர்களின் சாதனைகள் இவ்வைபவத்தில் போற்றிப் பாராட்டப்பட்டன. பல்வகைப்பட்ட படைப்பாக்கம் மற்றும் ஊடக கற்கைநெறிகளில் ஒட்டுமொத்தமாக 115 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். Animation, Game Development, Concept Art, மற்றும் Visual Effects (VFX) ஆகிய டிப்ளோமா பிரிவுகளில் மொத்தமாக 73 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதேவேளை, தமிழ் மொழி மூலம் 42 மாணவர்கள் வானொலி அறிவிப்புத்துறையில், Professional Training in Radio Presentation கற்கைநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து சான்றிதழையும் பெற்றுக்கொண்டனர். 

இந்த அக்கடமியில் தமது கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த மாணவர்களின் கடின உழைப்பு, படைப்பாக்கத்திறன், மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் பட்டதாரிகளுடன் இணைந்து பெற்றோர், இத்தொழிற்துறை வல்லுனர்கள், அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தினர்கள், மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். பட்டதாரிகளில் பலரும் ஏற்கனவே வேலைவாய்ப்புக்களைப் பெற்று, படைப்பாக்கம் மற்றும் டிஜிட்டல் மீடியா போன்ற துறைகளில் தீவிரமாக உழைத்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்திலான தொழில்சார் செயற்திட்டங்களுக்குப் பங்களித்து வருகின்றமை பட்டமளிப்பு நிகழ்வின் சிறப்பம்சமாக மாறியது. தொழிற்துறையை இலக்காகக் கொண்ட கல்வி மற்றும் நடைமுறை கற்றல் அனுபவங்கள் ஆகியவற்றில் இந்த அக்கடமி வலுவான கவனம் செலுத்தியுள்ளமையை அவர்களுடைய வெற்றி பிரதிபலிக்கின்றது. 

களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா அவர்கள் இவ்வைபவத்தின் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளார். பாரம்பரியக் கல்வி மற்றும் வெகுவேகமாக மாற்றம் கண்டு வருகின்ற உலகளாவிய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை ஆகியவற்றுக்கு இடையில் காணப்படும் இடைவெளியை நிரப்பும் நோக்குடன் Mogo Media Academy ஆரம்பிக்கப்பட்டது. அனிமேஷன் (animation), கேமிங் (gaming), VFX, டிஜிட்டல் உள்ளடக்க படைப்பாக்கம், மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் திறன்மிக்க தொழில் நிபுணர்களுக்கான கேள்வி அதிகரித்து வருவதை தெளிவாக இனங்கண்டு கொண்ட அக்கடமி, சர்வதேச தொழிற்துறை தராதரங்களுடன் ஒன்றியுள்ள உலகத்தரம் வாய்ந்த படைப்பாக்கக் கல்வியை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. 

தொழிற்துறையிலுள்ள அனுபவம் மிக்க தொழில் நிபுணர்களின் வழிகாட்டலுடன், நேரடியான, செயற்திட்ட அடிப்படையிலான கற்றல் அனுபவங்களை வழங்கி, திறமைமிக்க இலங்கை இளைஞர்,யுவதிகளுக்கு வலுவூட்டுவதற்காக இந்த அக்கடமி ஆரம்பிக்கப்பட்டது. சர்வதேச விரிவுரையாளர்கள் அணியால் நடாத்தப்பட்ட கற்றல் அமர்வுகள் மூலமாக மதிப்புமிக்க அனுபவத்தை மாணவர்கள் பெற்றுள்ளதுடன், சர்வதேச தொழிற்துறை தராதரங்களுக்கு ஈடாக தமது அறிவு, திறன்கள் மற்றும் புரிதலை மேம்படுத்திக் கொண்டுள்ளனர். நவீன தொழில்நுட்பம், தயாரிப்பு பணிப்பாய்வுகள், மற்றும் யதார்த்த உலக அனுபவம் ஆகியவற்றை வழங்குவதனூடாக, சர்வதேச அரங்கில் போட்டித்திறன் ஆற்றல் மிக்க புத்தாக்க படைப்பாளர்களாகவும், கதைப் படைப்பாளர்களாகவும், மற்றும் தொழில்நுட்ப தொழில் நிபுணர்களாகவும் மாறுவதற்கு மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. Mogo Media Academy செயற்பட ஆரம்பித்தது முதற்கொண்டே உயர் திறன் கொண்ட படைப்பாக்கத் தொழில் நிபுணர்களைத் தோற்றுவிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்துள்ள அதேசமயம், இலங்கையின் டிஜிட்டல் படைப்பாக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் பங்களித்து வருகின்றது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் ஆர்வம் கொண்ட இளைஞர்,யுவதிகள் மத்தியில் திறமைசாலிகளை வளர்த்து, புத்தாக்கத்தை ஊக்குவித்து, மற்றும் புதிய வாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதில் இந்த நிறுவனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. 

இப்பட்டமளிப்பு வைபவம் அக்கடமிக்கும், மற்றும் அதன் மாணவர்களுக்கும் பெருமைமிக்க, உணர்வுபூர்வமான தருணமாக மாறியதுடன், கல்விரீதியான சாதனையை மாத்திரமன்றி, சர்வதேச படைப்பாகத் துறையில் பிரகாசமான தொழில்வாய்ப்புக்களுக்கான ஆரம்பமாகவும் காணப்படுகின்றது.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

title