Jun 9, 2026 - 09:55 AM -
0
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் மேற்கு பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்த சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் இன்று (09) சாவகச்சேரி பொலிஸாரின் உதவியுடன் கிராம மக்கள் இணைந்து பிடித்ததுள்ளனர்
அதனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சருகுபுலியை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பாதுகாப்பாக கொண்டுசென்றுள்ளனர்.
--

