Header Logo

சினிமா
வெளியானது விஷாலின் ’மகுடம்’ டீசர்!

Jun 11, 2026 - 06:49 PM -

0

வெளியானது விஷாலின் ’மகுடம்’ டீசர்!

நடிகர் விஷால் தற்போது `மகுடம்' படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 35 ஆவது படம் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 99 ஆவது படம். துவக்கத்தில் இந்தப் படத்தை `ஈட்டி', `ஐங்கரன்' படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கி வந்தார். 

ஆனால் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இப்படத்திலிருந்து ரவி அரசு நீக்கப்பட்டு, படத்தை விஷாலே இயக்க துவங்கினார். 

இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதை சமீபத்தில் அறிவித்தனர். தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

விஷால் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மிஷ்கின் விலகியதை அடுத்து `துப்பறிவாளன் 2' படத்தை தானே இயக்குவதாக அறிவித்தார் விஷால். 

அந்தப் படம் மூலம் தான் இயக்குநராக விஷால் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், `மகுடம்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்!

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்!

நெல்லுக்கான உத்தரவாத விலையை உடன் வழங்குங்கள் - இளையதம்பி சிறிநாத்

நெல்லுக்கான உத்தரவாத விலையை உடன் வழங்குங்கள் - இளையதம்பி சிறிநாத்

செம்மணி இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன!

செம்மணி இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன!

எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்!

எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்!

ஏற்றுமதியாளர்களை முடக்கி நிலையான அபிவிருத்தியா?

ஏற்றுமதியாளர்களை முடக்கி நிலையான அபிவிருத்தியா?

ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு குழு ஆதரவு!

ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு குழு ஆதரவு!

மீன்பிடித்துறை அமைச்சரால், கொந்தளித்த அர்ச்சுனா

மீன்பிடித்துறை அமைச்சரால், கொந்தளித்த அர்ச்சுனா

title