Header Logo

செய்திகள்
அச்சுவேலி தீர்த்தங்குளத்தில் பாரிய தீ பரவல்

Jun 13, 2026 - 10:33 AM -

0

அச்சுவேலி தீர்த்தங்குளத்தில் பாரிய தீ பரவல்

யாழ்ப்பாணம், அச்சுவேலி தீர்த்தங்குளம் (வல்லை களப்பு) பகுதியில் நேற்று (12) இரவு கடும் காற்று காரணமாக பாரிய தீ பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. 

யாரோ ஒருவர் குப்பைகளுக்கு வைத்த தீ, காற்றின் வேகம் காரணமாகக் களப்பு பகுதி முழுவதும் பரவி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. 

பலத்த காற்று வீசியதால், தீ வேகமாகப் பரவி பல ஏக்கர் புற்தரைகள் எரிந்து சாம்பலாகின. அத்துடன், சிறிய உயிரினங்களின் வாழ்விடமாக விளங்கும் இக்களப்பு பகுதி பாரியளவில் சேதமடைந்துள்ளது. 

இது குறித்து அப்பகுதி மக்கள் அச்சுவேலி பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். அதனையடுத்து, பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர். 

அத்துடன் யாழ்ப்பாணம் மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, நீண்ட போராட்டத்திற்குப் பின் தீ முற்றாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

--

MOST READ

காணொளி
இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!