Jun 13, 2026 - 06:21 PM -
0
தற்போது நிலவி வரும் பலத்த மழைத்துடனான காலநிலை காரணமாக, மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தலை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த அபாய எச்சரிக்கை அறிவித்தல் இன்று (13) பிற்பகல் 4.00 மணி முதல் நாளை பிற்பகல் 4.00 மணி வரை அமலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பின்வரும் மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
களுத்துறை மாவட்டம்: பாலிந்தநுவர மற்றும் அகலவத்தை
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ
இரத்தினபுரி மாவட்டம்: அயகம, பெல்மடுல்ல, கொடகவெல, எலபாத, கலவானை, இரத்தினபுரி மற்றும் நிவித்திகலை
எனவே, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

