Header Logo

செய்திகள்
குடா கங்கை பகுதியில் சிறிய அளவிலான வெள்ள அபாயம்

Jun 13, 2026 - 09:23 PM -

0

குடா கங்கை பகுதியில் சிறிய அளவிலான வெள்ள அபாயம்

களு கங்கையின் கிளையாறான குடா கங்கை நீர்நிலைப் பகுதியில் தற்போது சிறிய அளவிலான வெள்ள நிலைமை பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அத்திணைக்களம், புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட குடா கங்கை மற்றும் மகுரு கங்கையின்  வெள்ளப்பெருக்கு சமவெளிகளைச் சார்ந்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இருப்பினும், தற்போது கிடைக்கப் பெற்றுள்ள மழைவீழ்ச்சி தரவுகள் மற்றும் நிலவும் மழை நிலவரங்களைக் கருத்தில் கொள்ளும்போது, அடுத்த சில மணித்தியாலங்களில் ஆற்றின் நீர்மட்டம் கணிசமாகவோ அல்லது விரைவாகவோ உயரும் என எதிர்பார்க்கப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல் நாளை (14) இரவு 7.30 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title