Jun 13, 2026 - 10:18 PM -
0
'இஸ்லாமாபாத் அமைதி உடன்படிக்கை' நாளை (14) ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திடப்பட மாட்டாது என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பகாயியை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரசு ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து, நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் 'இஸ்லாமாபாத் அமைதி உடன்படிக்கை' நாளை (14) கையெழுத்தாகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், மறுதரப்பின் தயக்கம் காரணமாக, ஒப்பந்தம் கையெழுத்தாகும் திகதி குறித்த எந்தவொரு கருத்து தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
இருப்பினும், வரும் நாட்களில் இந்த இஸ்லாமாபாத் உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என்றும் ஈரான் மேலும் தெரிவித்துள்ளது.

