Jun 14, 2026 - 12:20 PM -
0
கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு, இன்று (14) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்து புதிய பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால திறந்து வைத்தார்.
நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ச. பவானந்தராசா மற்றும் ரஜீவன் செயசந்திரமூர்த்தி, மாவட்ட செயலர் ம.பிரதீபன், பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பழைய பொலிஸ் நிலையம் அமைந்திருந்த பகுதியில் இருந்து இராச பாதை வீதியில் சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில், புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
--

