Header Logo

சினிமா
இணையத்தைக் கலக்கும் 'சேயோன்' அப்டேட்!

Jun 14, 2026 - 02:57 PM -

0

இணையத்தைக் கலக்கும் 'சேயோன்' அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன், தனது அடுத்தடுத்த வித்தியாசமான கதைக்களங்களால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். அந்த வகையில், உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படமான 'சேயோன்' குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

திரைப்படத்தை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகியாக 'மிஸ்டர் பச்சன்' படப்புகழ் பாக்யஸ்ரீ போர்ஸ் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

கிராமத்துப் பின்னணியில், சாமி ஆடும் ஒரு மிரட்டலான அவதாரத்தில் சிவகார்த்திகேயன் தோன்றுகிறார். "அவன் சாமி கும்பிடுறவன் இல்ல... சாமி வரவழைக்கிறவன்!" என்ற பன்ச் வசனத்துடன், சிவகார்த்திகேயன் 'லார்ட் விருமாண்டி' வேடத்தில் ஆக்ரோஷமாக என்ட்ரி கொடுப்பது ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது. இதுவரை சிவகார்த்திகேயனைப் பார்க்காத ஒரு முற்றிலும் புதிய ஆக்‌ஷன் மற்றும் ஆன்மீகப் பின்னணி கலந்த மாஸ் கதையாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படத்தின் ஒளிப்பதிவை விவேக் விஜயகுமாரும், படத்தொகுப்பை சான் லோகேஷும் மேற்கொள்கின்றனர். ஆக்ஷன் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைக்கிறார். அசுர வேகத்தில் தயாராகி வரும் 'சேயோன்' திரைப்படம், வரும் அக்டோபர் 2026 இல் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் சேயோன் பட கிளிக்கை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். 

முழுக்க முழுக்க ஆக்‌ஷன், எமோஷன் மற்றும் ஒரு புதுமையான கிராமத்து ஆன்மீக த்ரில்லராக உருவாகும் ‘சேயோன்’, சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title