Jun 14, 2026 - 03:29 PM -
0
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (14) 24 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் நடைபெற்றது.
இன்றுடன் 355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 341 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 02 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்தார்.
இவற்றில் 04 என்புகள் சிறுவர்களுடையதும், 02 வளர்ந்தவர்களுடையதும், ஒன்று குழந்தையினதுமாக காணப்பட்டுள்ளன.
இன்று புதிய வாரம் ஆரம்பித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் மேற்கொள்ளப்பட்டது.
அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.
--

