Header Logo

செய்திகள்
பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை

Jun 14, 2026 - 10:20 PM -

0

 பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை

நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இது தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளதுடன், இது நாளை (15) இரவு 08.30 மணி வரை செல்லுபடியாகும். 

இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், வட மாகாணம், வடமத்திய மாகாணம், திருகோணமலை மாவட்டம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, மேலே குறிப்பிடப்பட்ட மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இது தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.


MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title