Header Logo

சினிமா
முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு!

Jun 15, 2026 - 09:39 AM -

0

முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு!

த.வெ.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அதில், தனது கணவர் விஜய்க்கு, நடிகை ஒருவருடன் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாகவும், தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியிருந்த சங்கீதா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்றும், அவரது சமூக அந்தஸ்துக்கு ஏற்றவாறு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரி இருந்தார். 

இந்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம், வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதிக்கு தள்ளி வைத்தது. 

அன்றைய தினம் விஜய் - சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது சட்டத்தரணிகள் மட்டும் ஆஜரானாார்கள். விஜய், சங்கீதா இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால் நேரில் ஆஜராவதில் உள்ள பாதுகாப்பு மற்றும் இதர சிக்கல்களை கருத்தில் கொண்டு, வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை இன்று (15) ஒத்திவைக்கப்பட்டது. 

அதன்படி, முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. விஜய் முதலமைச்சரான பிறகு முதல் முறையாக இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் அவர் நேரில் ஆஜராவாரா? என்ற எதிர்ப்பர்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையில் விஜய் சங்கீதா இருவரும் மீண்டும் ஒன்றாக இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. 

இந்த சூழ்நிலையில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வர இருப்பதால் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.


MOST READ

காணொளி
யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

title