Jun 15, 2026 - 09:41 AM -
0
உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் துனீசியா மற்றும் சுவீடன் ஆகிய அணிகள் இன்று (15) காலை மோதின.
குழு Fக்கான இந்தப் போட்டியில் 5 இற்கு 1 என்ற கோல் கணக்கின் அடிப்படையில் சுவீடன் அணி, துனீசியா அணியை தோற்கடித்துள்ளது.
போட்டியின் முதல் கோல்லை சுவீடன் அணியின் Yasin ayari 7 ஆவது நிமிடத்திலும், போட்டியின் 30 ஆவது நிமிடத்தில் சுவீடன் அணியின் Alexander isak ஆகியோரும் அடித்தனர்.
அதன்பின் துனீசியா அணியின் Omar rekik 43 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.
போட்டியின் முதல்பாதி நேர முடிவில் சுவீடன் 2 கோல்களையும், துனீசியா 1 கோலையும் பெற்றிருந்தது.
இதன்பின் இரண்டாவது பாதி ஆட்டத்தின் போது சுவீடன் அணியின் Viktor G 59 ஆவது நிமிடத்திலும், Mattias S 84 ஆவது நிமிடத்திலும், Yasin ayari 96 நிமிடத்திலும் கோல்களை அடித்து அசத்தினார்.
நடைபெற்றுவரும் இந்த உலகக் கிண்ணத்தில் சுவீடன் அணி பெற்ற முதல் வெற்றியாக அமைந்துள்ளது.

