Header Logo

சினிமா
சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படத்தில் ஜீவா!

Jun 15, 2026 - 11:24 AM -

0

சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படத்தில் ஜீவா!

கடந்த 37 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பெற்று தனித்துவமான படங்களை தயாரித்த நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். 

இதன் தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி சமீபத்தில் விபத்தில் காலமானார். 

தற்போது இந்த நிறுவனம் தனது 99வது படமாக விஷால் நடிப்பில், அவரது இயக்கத்தில் "மகுடம்" என்கிற படத்தை தயாரித்து வருகிறது. 

நூறாவது படத்தை முதலில் விஜய்யை வைத்தும், அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்தும் தயாரிக்க ஆர்.பி. சவுத்ரி திட்டமிட்டு இருந்தார் என்று செய்திகள் கொஞ்ச நாட்களுக்கு முன்பு வெளியாகின. 

இந்த நிலையில் தற்போது நூறாவது படத்தில் ஆர்.பி. சவுத்ரியின் மகனான நடிகர் ஜீவாவே நடிக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜீவா நடிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறி ஜீவாவுக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது. 

அதனால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையே தங்களது நூறாவது படமாக கூட தயாரிக்கலாம் என்கிற எண்ணமும் இருப்பதாக இன்னொரு தகவல் சொல்லப்படுகிறது.

MOST READ

காணொளி
யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

title