Jun 17, 2026 - 02:11 PM -
0
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கி 2022 இல் வெளியான படம் `கட்டா குஸ்தி'. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி ஜூலை 3 ஆம் திகதி வெளியாக உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று (16) நடைபெற்றது.
இதில் சினிமாவில் நடிகைகளுக்கு சம்பளம் குறைவாக இருப்பது குறித்து கேள்வி முன்வைக்கப்பட, அதற்குப் பதில் அளித்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அவர் கூறியபோது,
"அமீர்கான் சார் இதற்கு ஒரு பேட்டியில் பதில் கூறி இருந்தார். சம்பளம் என்பது ஆண் - பெண் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது.
உங்களால் எவ்வளவு டிக்கெட் விற்கிறது என்பதை மையப்படுத்தியது. எனக்காக அதிக டிக்கெட் விற்பனையாகும்போது, அதற்கான சம்பளத்தை நான் கேட்பேன். ஆனால் இப்போது யாருடனும் என்னை ஒப்பிட்டுக்கொள்ள விரும்பவில்லை.
எனவே, இப்போது நான் அப்படி சம்பளம் கேட்க மாட்டேன், ஒருநாள் வரும், அப்போது கேட்பேன்" என தெரிவித்தார்.

