Header Logo

சினிமா
நடிகை ருக்மணி வசந்த் மார்பிங் சர்ச்சை!

Jun 22, 2026 - 03:18 PM -

0

நடிகை ருக்மணி வசந்த் மார்பிங் சர்ச்சை!

நடிகை ருக்மணியின் புகைப்படத்தைத் தவறாகச் சித்தரித்து, சோசியல் மீடியாவில் கசியவிட்ட மூவர். தனிப்படை அமைத்துத் தட்டி தூக்கிய கர்நாடக சைபர் கிரைம் ​பொலிஸார். 

காந்தாரா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந்த். சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடிகைகளைத் தவறான கோணங்களில் படம் பிடிக்கும் புகைப்பட கலைஞர்கள் மற்றும் வீடியோ கிராபர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருந்தார். 

தங்களின் வீடியோ மற்றும் போட்டோக்கள் தவறான கோணங்களில் ஜூம் செய்யப்பட்டுப் பகிரப்படுவது அவமரியாதைக்குரியது எனவும் குற்றம் சாட்டியிருந்தார். 

அனுமதியின்றி போட்டோ எடுப்பதுடன் அதை சோசியல் மீடியாவில் தவறாக சித்தரித்து பரப்பும் ஆண்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையே தனது புகைப்படத்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஆபாசமாகச் சித்தரித்துக் கசிய விடுவதாக நடிகை ருக்மணி வசந்த் கர்நாடக பொலிஸில் புகார் அளித்தார். நடிகையின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும், அவரது தனியுரிமையை மீறியதாகவும் ருக்மணி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

இப்புகார் தொடர்பாக விசாரணையை தொடங்கிய பெங்களூரு சைபர் கிரைம் பொலிஸார், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் கீழ் அடையாளத்தைத் திருடுதல், ஒரு நபரைத் தவறாகச் சித்தரித்தல், தனியுரிமை மீறல், ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கத்தைப் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழும்; பாரதிய நியாய சன்ஹிதா (BNS)-இன் கீழ் பாலியல் துன்புறுத்தல், பெண்ணின் கண்ணியத்தைக் குலைத்தல், ஆபாசம், போலி ஆவணம் தயாரித்தல் மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்தனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டறிய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இறுதியாக நடிகையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்துப் பரப்பிய கர்நாடகாவின் பாகல்கோட் பகுதியைச் சேர்ந்த ரவி குமார், சந்திரகாந்த் கவுடா மற்றும் ரஞ்சித் ஆகிய மூன்று பேரை பொலிஸார் கைது செய்தனர். 

நடிகையின் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மூவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடிகை ருக்மணியின் புகைப்படத்தை மட்டும்தான் தவறாக சித்தரித்தார்களா? இல்லை வேறு ஏதேனும் நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கையில் இவர்கள் எல்லைமீறியுள்ளார்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். அதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


MOST READ

காணொளி
இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!