Jun 22, 2026 - 05:05 PM -
0
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மேலும் தமிழில் அவர் காந்தா படத்தில் நடித்து இருந்தார்.
அடுத்து அவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக சேயோன் படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது தெலுங்கில் லெனின் என்ற படத்தில் பாக்யஸ்ரீ நடித்து இருக்கிறார். அது பற்றி அளித்த ஒரு பேட்டியில் தனக்கு அவுரங்காபாத் முதல் வீடு என்றால், ஹைதராபாத் இரண்டாவது வீடு ஆகி இருக்கிறது என கூறி இருக்கிறார். அவருக்கு தொகுப்பாளரும் வாழ்த்து கூறி இருக்கிறார்.
அவர் தெலுங்கு நடிகருடன் காதலில் இருப்பதை தான் இப்படி சொல்லி இருக்கிறாரோ, யார் அந்த நடிகர்? என நெட்டிசன்கள் தற்போது பேச தொடங்கிவிட்டனர்.

