Header Logo
SLIC
வணிகம்
INSEE Lanka மற்றும் இலங்கை கடலோரக் காவல்படை இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தில் கடலோரப் பாதுகாப்பு முன்முயற்சியை ஆரம்பித்துள்ளன

Jun 22, 2026 - 05:40 PM

INSEE Lanka மற்றும் இலங்கை கடலோரக் காவல்படை இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தில் கடலோரப் பாதுகாப்பு முன்முயற்சியை ஆரம்பித்துள்ளன
Mobitel Inner 1278
EDEX Inner

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு INSEE Lanka, இலங்கை கடலோரக் காவல்படையுடன் இணைந்து முக்கிய கடலோரச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இது வருடாந்தம் 10,000 முதில்ல மற்றும் கண்டல் மரங்களை நாட்டும் கடலோரக் காவல்படையின் இலக்கிற்கு ஆதரவாக முன்னெடுக்கப்படும் முயற்சி ஆகும். இம் முயற்சியில் INSEE இன் ஈடுபாடு, இலங்கையின் கரையோர சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்குமான நிறுவனத்தின் நீண்டகால அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. மேலும், காலநிலை மாற்றத்தால் உருவாகும் சவால்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதும் கார்பன் உறிஞ்சுதலை ஊக்குவிப்பதும் இத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். 

இத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, 2026 ஜூன் 5 அன்று பாணந்துறை கடற்கரையில் அமைந்துள்ள கடலோரக் காவல்படையின் உயிர்காக்கும் நிலையத்திற்கு அண்மையில் 100 முதில்ல மரக்கன்றுகளை நாட்டுவதுடன் ஆரம்பமானது. இது வருடாந்த இலக்கை நோக்கிய முதல் கட்ட நடவடிக்கையாக அமைந்தது. 

திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், இலங்கை கடலோரக் காவல்படையால் நாட்டின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் மொத்தமாக 1,000 முதில்ல மற்றும் 750 கண்டல் கன்றுகள் நாட்டப்பட்டன. அரிப்பைத் தடுக்க இயற்கைப் பாதுகாப்புச் சுவராக செயல்படுதல், உயிர்ப் பல்வகைமையைப் பாதுகாத்தல் மற்றும் கடலோர நிலைத்தன்மையை வலுப்படுத்தல் போன்ற திறன்களை கருத்தில் கொண்டு இத் தாவர வகைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. 

திட்டத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக தன்னார்வ ஆதரவு, நாற்றுமேடைப் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் INSEE Lanka தொடர்ந்து பங்களிக்க உறுதியளித்துள்ளது. இந்த ஒத்துழைப்பு, நிறுவனத்தின் Sustainability Ambition 2030 நோக்கத்துடன் இணங்குவதோடு, குறிப்பாக உயிர்ப் பல்வகைமைப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மீளுருவாக்கம் தொடர்பான அதன் நீண்டகால அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. 

இலங்கையின் கடலோரப் பாதுகாப்பு முயற்சிகளில் தொடர்ந்து பங்காற்றி வரும் INSEE Lanka, தேசிய நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து இதுவரை 10 ஹெக்டேயருக்கும் மேற்பட்ட கண்டல் பகுதிகளை மீளுருவாக்கம் செய்துள்ளதுடன், 10,000 இற்கும் அதிகமான கன்றுகளை நாட்டியுள்ளது. இந்த பங்களிப்புகள் கடலோர உயிரியல் அமைப்புகளை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், கடலோர சமூகங்களின் நிலைத்தன்மையையும் வலுப்படுத்துகின்றன. மேலும் இது, இலங்கையின் காலநிலை மாற்றத்திற்கான தழுவல் முயற்சிகள் மற்றும் உயிர்ப் பல்வகைமை பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் ஒத்திசைகிறது.


MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278