Header Logo
SLIC
பல்சுவை
இன்ஸ்டாகிராம் காதலனை பார்க்க வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி!

Jun 22, 2026 - 06:31 PM

இன்ஸ்டாகிராம் காதலனை பார்க்க வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி!
Mobitel Inner 1278
EDEX Inner

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 

சிறுமி தனது தந்தை தொலைபேசியில் இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்தி வந்துள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பெரம்பலூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் கேரள மாநில பாலக்காட்டை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. 

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில், கடந்த 20 ஆம் திகதி இன்ஸ்டாகிராம் காதலனை பார்க்க தனது தந்தையின் தொலைபேசி எடுத்துக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி திருச்செங்கோடு வந்துள்ளார். 

அங்கிருந்து பாலக்காட்டிற்கு எப்படி செல்வது என்று தெரியாமல் திணறிய சிறுமி, திருச்செங்கோடு அரச வைத்தியசாலை பிரசவ வார்டில் தஞ்சமடைந்தார். 

நள்ளிரவு வரை அங்கேயே இருந்ததால் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து பணியில் இருந்து Nurse சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் சிறுமியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 

விசாரணையில், இன்ஸ்டாகிராம் காதலனை பார்க்க பெரம்பலூர் சென்றதும், வழி தெரியாததால் திருச்செங்கோடு அரசு வைத்தியசாலையில் தஞ்சமடைந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சிறுமிக்கு அறிவுரை வழங்கிய பொலிஸார் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் சிறுமியை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278