Header Logo

ஏனையவை
இலங்கைக் கடற்படையின் செயற்கைக்கோள் தொடர்பாடல் கட்டமைப்பினை வழங்கும் அமெரிக்கா!

Jun 22, 2026 - 06:41 PM -

0

இலங்கைக் கடற்படையின் செயற்கைக்கோள் தொடர்பாடல் கட்டமைப்பினை வழங்கும் அமெரிக்கா!

உலகின் மிகவும் பரபரப்பான சில கப்பற் போக்குவரத்து வழித்தடங்களில் கடல்சார் இணைப்பை பலப்படுத்தும் வகையில், Fleet Broadband செயற்கைக் கோள் தொடர்பாடல் தொழினுட்பத்தினை இலங்கைக் கடற்படைக்கு அமெரிக்கா வழங்குமென கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எஸ்எல்என்எஸ் கஜபாகு கப்பலில் வைத்து, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் போல் கபூர் இன்று (22) அறிவித்தார். 

கஜபாகு கப்பலில், உதவி இராஜாங்கச் செயலாளர் கபூர், கெளரவ பிரதிப் பாதுகாப்பமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருன ஜயசேகரவும், இலங்கைக் கடற்படையின் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்ச்சன பனாகொடவும் வரவேற்றனர். 

கடல்சார் ஒத்துழைப்பு குறித்தும், சர்வதேச கப்பற் போக்குவரத்துப் பாதைகளைப் பாதுகாத்தல், பிராந்திய பேரனர்த்தங்களின் போதான பதிலளிப்புப் பணிகளுக்கு உதவி செய்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடித்தல் ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட அமெரிக்க தொடர்பாடல் தொழினுட்பத்தின் பங்கு குறித்தும் அவர்கள் இதன்போது கலந்துரையாடினர். 

Fleet Broadband தொடர்பாடல் கட்டமைப்பினை நிறுவுவதன் மூலம், கூட்டுப் பயிற்சிகள் அல்லது நிஜ உலகப் பணிகள் என எதுவாக இருந்தாலும், கடலில் அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, பங்காளர் நாடுகளுடன் தடையின்றி இணைந்து பணியாற்றுவதற்குத் தேவையான சிறப்பான உபகரணங்கள் இலங்கைக் கடற்படைக்குக் கிடைக்கும். 

இலங்கைக் கடற்படையின் புறக்கடலோர ரோந்துக் கப்பல்களில் நிறுவுவதற்காக, Cobham மற்றும் Inmarsat இனால் தயாரிக்கப்பட்ட, அண்ணளவாக 4 மில்லியன் டொலர்கள் (1.2 பில்லியன் இலங்கை ரூபாய்களுக்கும் அதிக) பெறுமதியான, ஒரு விரிவான Fleet Broadband தொகுதியினை, அமெரிக்கா வழங்கியது. 

மேம்படுத்தப்பட்ட அமெரிக்க செயற்கைக்கோள் தொடர்பாடல் தொழினுட்பத்தின் மூலம் இயங்கும் Fleet Broadband, கப்பல்களுக்கிடையேயும் மற்றும் கப்பல்களிலிருந்து கரைக்கும் பாதுகாப்பானமுறையில் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதைச் சாத்தியமாக்குகிறது. 

இதன்மூலம், கரையோர எல்லையிலிருந்து தொலைவிலுள்ள கடற் பிராந்தியங்களில் செயற்படும்போதும், நம்பகமான குரல், தரவு மற்றும் தகவல் பகிர்வு உறுதிசெய்யப்படுகிறது. தலைமையகம், விமானங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தின் தொலைதூரப் பகுதிகள் உட்பட, பரந்த கடற் பிராந்தியங்களில் இயங்கும் பிற கப்பல்களுடன் நிகழ்நேர தொடர்பைப் பேணுவதற்கு, இத்தொடர்பாடல் கட்டமைப்பு இலங்கைக் கடற்படைக்கு உதவி செய்யும். 

இத்திறனானது, கடல்சார் கள விழிப்புணர்வை பலப்படுத்தும், செயற்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்தும், அவசரநிலைகளுக்கு பதிலளிப்பதற்கும், சட்டவிரோத கடத்தல்களில் ஈடுபடும் கப்பல்களை இடைமறிப்பதற்கும் உதவியாக அமையும், தடைசெய்யப்பட்ட கப்பல்களைக் கண்காணிக்கும், மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு ஆதாரமாக விளங்கும் மிகமுக்கியமான விநியோகப் பாதைகளைப் பாதுகாக்கும். 

“எமது இந்தோ - பசிபிக் பங்காளரான இலங்கைக் கடற்படைக்கு, அமெரிக்க செயற்கைக்கோள் தொடர்பாடல் தொழினுட்பத்தை வழங்குவதை இன்று நாம் அறிவித்தோம்.” என கபூர் கூறினார். 

இலங்கைக் கடற்படைக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் மேம்படுத்தலைக் குறிக்கும், இந்த பாதுகாப்பான, நிகழ்நேர இணைப்பினை, அவர்களின் புறக்கடலோர ரோந்துக் கப்பல்கள் அனைத்திலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். அத்துடன் கடலிலிருந்து தொடர்பாடல்களை மேற்கொள்வதில் எவ்வித இடைவெளிகளும் ஏற்படாமல் இருப்பதை அது உறுதி செய்யும். 

அவசரநிலைகளுக்கு விரைந்து பதிலளிப்பதற்கும், எமது பொருளாதாரத்திற்கு உந்துசக்தியாக விளங்கும் சரக்குக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கும், இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகள் எமது கரைகளை வந்தடைவதற்கு முன்பே அவற்றை முறியடிப்பதற்கும் இலங்கைப் பங்காளர்களுக்கு அது உதவி செய்யும்.” என அவர் மேலும் தெரிவித்தார். 

உலகின் மிகவும் பரபரப்பான சில கப்பற் போக்குவரத்து வழித்தடங்களில் நடைபெறும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதில் இலங்கைக் கடற்படை வகிக்கும் இன்றியமையாத பங்கினை மீளவலியுறுத்திய அதேவேளை, இப்புதிய தொடர்பாடல் திறனானது, கடல்சார் விழிப்புணர்வையும், அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறதென, பிரதிப் பாதுகாப்பமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர அடிக்கோடிட்டுக் காட்டினார். 

Fleet Broadband இன் அறிமுகமானது, சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதையும், சர்வதேச கப்பற் போக்குவரத்துப் பாதைகளின் தொடர்ச்சியான நம்பகத்தன்மையை பலப்படுத்துதையும் சாத்தியமாக்கி, இலங்கைக் கடற்படையின் அனைத்து கப்பல்களுக்கிடையேயும் தடையற்ற தொடர்பாடல் இணைப்பைப் பேணுவதற்கும், இலங்கையின் கடல்சார் ஆளுகைப் பகுதி முழுவதும் நிகழ்நேர சூழ்நிலை விழிப்புணர்வைத் தக்கவைப்பதற்கும், பிராந்திய பங்காளர்களுடன் மிகமுக்கியமான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்குமான இலங்கைக் கடற்படையின் திறனைக் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்துமென அவர் மேலும் குறிப்பிட்டார்.


MOST READ

காணொளி
இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!