Header Logo
SLIC
உலகம்
ட்ரோன்கள் மூலம் உக்ரைன் சரமாரி தாக்குதல்!

Jun 23, 2026 - 10:25 AM

ட்ரோன்கள் மூலம் உக்ரைன் சரமாரி தாக்குதல்!
Mobitel Inner 1278
EDEX Inner

உக்ரைனை கைப்பற்றும் நோக்கில் கடந்த 2022 பிப்ரவரி 24 ஆம் திகதி அந்நாட்டின் தலைநகர் கீவ்வை நோக்கி ரஷ்ய இராணுவம் போர் தொடுத்தது. 

இந்த போர் நடவடிக்கைக்கு பதிலடி தரும் விதமாக, உக்ரைன் இராணுவம் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை நோக்கி சுமார் 300 இற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் இராணுவம் கடந்த 21 ஆம் திகதி தாக்குதலில் ஈடுபட்டது. 

இதில் 59 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து மாஸ்கோவின் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. 

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, உக்ரைனின் தெற்கு ஒடெசா பிராந்தியத்தின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. 

இந்த தாக்குதலில் ஒருவர் இறந்துவிட்டதாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் உக்ரைனின் ஒடெசா பிராந்திய ஆளுநர் ஓலே கிப்பர் தெரிவித்தார். 

ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒடெசா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயப் பண்ணை முழுவதுமாக சேதமடைந்து, அவசரகால மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278