Jun 23, 2026 - 11:15 AM
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்பாக, நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து பாரியதொரு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் போது விவசாயிகள் பின்வரும் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
உற்பத்திச் செலவுக்கு நிகரான நியாயமான விலை நெல்லுக்கு வழங்கப்பட வேண்டும். நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக அரசே நேரடியாக நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும்.
விவசாயத்திற்கான உரம் உள்ளிட்ட ஏனைய இரசாயனங்கள் மற்றும் உள்ளீடுகள் நியாயமான விலையில் கிடைக்கப் பெற வேண்டும்.
உள்நாட்டு விவசாயிகளைப் பாதிக்கும் அரிசி இறக்குமதியை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்பவனவாகும்.
காந்தி பூங்காவிற்கு முன்பாக ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, மட்டக்களப்பு நகரின் மணிக்கூட்டுக் கோபுரம் வழியாக, சென்ட்ரல் வீதி ஊடாக மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.
பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், தமக்கான தீர்வுகள் விரைவாக எட்டப்பட வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

































