Jun 23, 2026 - 05:58 PM -
0
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மிக எளிதாக சர்வதேச சொகுசுச் சுற்றுலாவை அனுபவிக்கும் வகையில், அகமதாபாத் மற்றும் கொழும்பு நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை 2026 ஜூன் 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகியது. இலங்கையின் முதலாவது தனியார் சர்வதேச விமான சேவை நிறுவனமான ஃபிட்ஸ்ஏர் (FitsAir) இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் எவ்வித சிரமமுமின்றி வெறும் 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் போன்ற குறுகிய காலத்தில் இரு நகரங்களுக்கும் இடையே பயணிக்க முடியும்.
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா, சினமன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் மற்றும் வாக்கர்ஸ் டூர்ஸ் (Walkers Tours) ஆகிய நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய விமான சேவை, குஜராத் பயணிகள் இலங்கையில் ஒரு புதிய அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் ஆடம்பர வார இறுதி விடுமுறைகள், குடும்பச் சுற்றுலாக்கள், திருமண நிகழ்வுகள், பொழுதுபோக்கு மற்றும் ஆன்மீகச் சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றுக்காக வருகை தரும் குஜராத் பயணிகளுக்கு ஒரு தனித்துவமான மற்றும் உயர்தர சேவை கிடைக்கும் என்பது உறுதி.
இப்புதிய விமான சேவை ஆரம்பிக்கப்பட்டமை குறித்து, சினமன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் நிறுவனத்தின் கொழும்பு ஹோட்டல்களுக்கான சிரேஷ்ட துணைத் தலைவரும், சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் பொது முகாமையாளருமான கமல் முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இந்தியப் பயணிகள் தங்களுக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய மற்றும் மிக உயர்ந்த தரத்திலான சர்வதேச சுற்றுலாத் தளங்களையே அதிகம் விரும்புகின்றனர். இந்த புதிய விமான சேவையின் மூலம் குஜராத்தில் இருந்து வரும் பயணிகள் முன்னெப்போதையும் விட மிக எளிதாக கொழும்பு நகரத்திற்கும் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவிற்கும் வர முடியும்.” என்றார்.
இந்த நிலையில், பிட்ஸ்எயார் நிறுவனத்தின் இயக்குனர் அம்மார் காசிம் தெரிவிக்கையில், “அகமதாபாத் மற்றும் கொழும்பு இடையே நேரடி விமான சேவையொன்றை ஆரம்பிக்கக் கிடைத்ததையிட்டு நாம் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். பயணிகளுக்கு எவ்வித சிரமமுமின்றி மிகவும் வசதியானதொரு பயணத்தை வழங்குவதற்காகவே இந்த புதிய சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதன் மூலம் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான சுற்றுலா வணிகமும், கலாச்சார உறவுகளும் மேலும் வலுவடையும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.
குறைந்த பயண நேரம், காத்திருப்பு நேரங்கள் இல்லாத சூழல், பிரத்யேக சுற்றுலாப்; பொதிகள் மற்றும் UPI பணப்பரிவர்த்தனை போன்ற நவீன வசதிகள் காரணமாக, இந்தியப் பயணிகளைக் கவரும் மிகச் சிறந்த சர்வதேச சுற்றுலாத் தளமாக இலங்கை மாறியுள்ளது. குறிப்பாக, இராமாயண யாத்திரை போன்ற கலாச்சார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் குஜராத் குடும்பங்களை ஈர்க்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. அத்துடன், கொழும்பின் ஆடம்பர விருந்தோம்பல், வர்த்தக நிலையங்கள், இரவு நேரக் கேளிக்கை மற்றும் கடற்கரைகளும் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை தருகின்றன.
அகமதாபாத் - கொழும்பு விமான சேவை: பயணிகள் அறிய வேண்டியவை இந்த நேரடி விமான சேவை அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கும், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே இயங்கவுள்ளது. இதனால் பயணத்திற்காக எடுக்கும் மொத்த நேரம் கணிசமாகக் குறைவடைவதுடன், வேறு விமானங்களுக்கு மாற வேண்டிய அசௌகரியங்களும் தவிர்க்கப்படுகின்றன. இதற்கு வெறும் 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் மட்டுமே எடுப்பதால், குஜராத்தில் இருந்து வருபவர்களுக்கு மிக விரைவாகவும் எளிதாகவும் சென்றடையக்கூடிய சிறந்த சர்வதேச விடுமுறைத் தளமாக கொழும்பு நகரைக் குறிப்பிடலாம். 2026 ஜூன் 19 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஃபிட்ஸ்எயார் நிறுவனம் வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்த விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.
பயணிகள் தங்களின் விடுமுறை நேரத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த விமான கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பை வந்தடைந்த உடனேயே எவ்வித தாமதமுமின்றி பயணத்தை ஆரம்பிக்க முடியும். இப்பயணங்களுக்காக ஃபிட்ஸ்எயார் நிறுவனத்தின் நவீன Airbus விமானங்கள் பயன்படுத்தப்படுவதுடன், மிகவும் திறமையான போர்டிங் வசதிகள், சுமுகமான விமானப் பணிக்குழாமினரின் சேவை மற்றும் சுவையான சிற்றுண்டிகளுடன் கூடிய உயர்தர வசதியான சர்வதேச விமானப் பயண அனுபவமும் பயணிகளுக்குக் கிடைக்கும்.
குறுகிய கால சொகுசு விடுமுறைக்கு கொழும்பு மற்றும் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஏன் சிறந்த தேர்வு? அகமதாபாத்தில் இருந்து வெறும் 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களில் சென்றடையக்கூடிய கொழும்பு நகரம், இந்தியப் பயணிகள் விரைவானதொரு வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்வதற்குச் சிறந்ததொரு இடமாகும். இந்த நேரடி விமான சேவை மூலம் தேனிலவுத் தம்பதிகள், குடும்பங்கள், ஆடம்பர அனுபவங்களைத் தேடுபவர்கள், சுவையான உணவுகளை விரும்புவோர் மற்றும் குறுகிய விடுமுறையை எதிர்பார்க்கும் இளைஞர்கள் இலங்கையை நோக்கி அதிகளவில் ஈர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக, கண்டி முதல் தெற்குக் கடற்கரை வரை முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் சினமன் ஹோட்டல் வலையமைப்பின் மூலமாக பிரத்யேக சுற்றுலாத் திட்டங்களும் பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த முழுமையான சுற்றுலா அனுபவத்தின் முக்கிய ஈர்ப்பாக புதிதாகத் திறக்கப்பட்டுள்ள சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா விளங்குகிறது. தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த ஆடம்பர சுற்றுலா விடுதியான இது, ஆடம்பர தங்குமிட வசதிகள், சுவையான உணவகங்கள், இரவு நேரக் கேளிக்கை, பொழுதுபோக்குகள், ஓய்வெடுக்கும் இடங்கள் மற்றும் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கான வசதிகள் என அனைத்துச் சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரும் ஒரு தனித்துவமான இடமாகும். இது தவிர, கொழும்பு நகரிலுள்ள சினமன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் குழுமத்திற்குச் சொந்தமான முன்னணி ஹோட்டல்களான சினமன் கிராண்ட், சினமன் லேக்சைட் மற்றும் சினமன் ரெட் ஆகியவற்றிலும் பயணிகள் வசதியான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
முன்பதிவுகளுக்கு: https://www.cinnamonhotels.com/cinnamon-life-city-of-dreams-sri-lanka/offers/chalo- colombo-

