Header Logo

விளையாட்டு
டெல்லிக்கு திரும்பும் ரிஷப் பண்ட்!

Jun 23, 2026 - 06:24 PM -

0

டெல்லிக்கு திரும்பும் ரிஷப் பண்ட்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக இருந்த ரிஷப் பண்ட், தனது பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். 

2016 முதல் 2024 வரை டெல்லி அணிக்காக விளையாடிய ரிஷப் பண்ட், 2021 முதல் 2024 வரை அணி தலைவராகவும் செயல்பட்டார். ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில், 27 கோடி ரூபா என்ற மெகா தொகைக்கு லக்னோ அணி அவரை வாங்கியதுடன், அணி தலைவராகவும் நியமித்தது. 

ஆனால், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி கடந்த இரண்டு சீசன்களிலும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற தவறியது. 

குறிப்பாக சமீபத்தில் முடிந்த சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இதையடுத்து, அணி தலைவர் பொறுப்பில் இருந்து விலக விருப்பம் தெரிவித்த ரிஷப் பண்ட்டின் கோரிக்கையை லக்னோ நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. மேலும், இவர் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், டிரேடிங் முறையில், ரிஷப் பண்ட்டை 15 கோடி ரூபாவுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மீண்டும் தங்களது அணியில் சேர்த்துள்ளது. அவர் லக்னோ அணியுடன் வைத்திருந்த 27 கோடி ரூபா ஒப்பந்தத்தை விட 12 கோடி ரூபா குறைவான தொகையில் இந்த ஒப்பந்தம் நடந்துள்ளது. 

அதே நேரத்தில், கடந்த ஐந்து சீசன்களாக டெல்லி அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக விளங்கிய குல்தீப் யாதவ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்துள்ளார். ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாக அவரை அணியில் சேர்த்துள்ள லக்னோ அணி 13.50 கோடி ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 

அடுத்த ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் ஒரு ஆண்டு காலம் இருக்கும் நிலையிலும், இந்த மெகா டிரேடிங், அடுத்த சீசனின் மீதான எதிர்பார்ப்பை தற்போதே பல மடங்கு உயர்த்தியுள்ளது.


MOST READ

காணொளி
முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்