Header Logo

செய்திகள்
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது

Jun 24, 2026 - 11:09 AM -

0

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது

ஜனவரி மாத தொடக்கம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சம் (1.1 மில்லியன்) எல்லையைத் தாண்டியுள்ளது.

அதன்படி, ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூன் 21ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,104,354 ஆகப் பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜூன் 01ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 82,332 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் இதுவரை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 31,158 ஆகும்.

இரண்டாவது அதி கூடிய சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வருகை தந்துள்ளதோடு, அந்த எண்ணிக்கை 6,658 ஆகப் பதிவாகியுள்ளது. மூன்றாவது இடத்தில் சீனாவிலிருந்து 5,178 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, இவ்வருடத்தின் கடந்துள்ள காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 281,418 ஆகும்.

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 104,751 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 76,963 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், இவ்வருடத்தில் மாதமொன்றில் பதிவான அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை பெப்ரவரி மாதத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 279,328 ஆகக் குறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!