Jun 24, 2026 - 01:03 PM -
0
தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபருக்கு உதவிய குற்றச்சாட்டில் குண்டசாலை பிரதேச சபையின் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸின் விசேட பொலிஸ் குழுவினர் குண்டசாலை பகுதிக்குச் சென்று இன்று (24) இந்த நபரைக் கைது செய்துள்ளதாக நுவரெலியா பிரிவிற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (01) சந்தன பஸ்நாயக்க தெரிவித்தார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், கைது செய்யப்பட்டுள்ள இந்த ஓட்டுநரின் நண்பர் என்பதுடன், சந்தேகநபரின் தொலைபேசி தரவுகளின் ஊடாகவே இந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

