Jun 24, 2026 - 02:04 PM -
0
கடவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேருந்து நிலையத்திற்குள் பேருந்து ஒன்று செலுத்தப்பட்ட போது, பாதசாரியொருவருடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 49 வயதுடைய நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ராகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

