Jun 24, 2026 - 02:15 PM -
0
கமல்ஹாசன் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் தர்மன் பட தொடக்க விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் அலுவலகத்தில் இன்று எளிமையாக நடந்தது.
இதில் குறிப்பிட்ட சிலரே கலந்து கொண்டனர். தர்மன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் அதிரடி டாக்டராக ரஜினிகாந்த் இருக்கிறார்.
சென்னையில் வசித்த 5 ரூபாய் டாக்டர் கதை இது என்று கூறப்பட்ட நிலையில், டாக்டரை வேறு மாதிரி அஷ்வத் காண்பிக்கிறார்.
அவருக்கு ஆக் ஷன் இருக்கிறது என்று அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெரிகிறது.
ஹீரோயினாக சிம்ரன் நடிக்கிறார். அவர் ரஜினியுடன் பேட்ட, கமலுடன் பல படங்களில் நடித்தவர். ராஷி கண்ணாவும் இருக்கிறார்.
இந்த படத்தில் மகனாக பிரதீப்ரங்கநாதன் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், அது பற்றிய விவரம் தெரியவரவில்லை.
நாளை முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. ரஜினி கமல் இணையும் இந்த படத்தில் தயாரிப்பாளரான கமல் நடிக்கிறாரா? கௌரவ வேடத்தில் பாடல் காட்சியில் வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, கமல் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஆகியோரும் திரைத்துறையில் இருக்கிறார்கள்.
அப்பா இணையும் இந்த படத்தில் அவர்கள் பங்கு இருக்குமா? ஒரு பாடலுக்கு ஆடுவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க ரெடி, இந்த முக்கியமான படத்தில் தங்கள் முகமும் வர வேண்டும் என்று பல நடிகர், நடிகைககள் கமல், ரஜினி, இயக்குனர் தரப்பிடம் பேசிக் கொண்டும் இருக்கிறார்களாம்.

