Header Logo
Mogo Academy

செய்திகள்
யடியந்தோட்டை போக்குவரத்து பிரிவு OIC கைது

Jun 28, 2026 - 01:01 PM -

0

யடியந்தோட்டை போக்குவரத்து பிரிவு OIC கைது
Mobitel inner

தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பாக, யடியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி  கைது செய்யப்பட்டுள்ளார்.

சீதாவகபுர குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி குறித்த பொறுப்பதிகாரி கடமை நிமித்தம் வெளியில் சென்ற போது, பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்றையும் 10 தோட்டாக்களையும் எடுத்துச் சென்றுள்ளார் என்றும், எனினும் மீண்டும் அந்தத் தோட்டாக்களை அவர் ஒப்படைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட சீதாவகபுர குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், யடியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு ஓ.ஐ.சி ஆகக் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகரை நேற்று (27) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (28) ருவான்வெல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara