Header Logo
SLIC
பல்சுவை
பெற்றோரையே மரண தண்டனை கேட்க வைத்த பகீர் பின்னணி!

Jun 30, 2026 - 09:32 AM

பெற்றோரையே மரண தண்டனை கேட்க வைத்த பகீர் பின்னணி!
Mobitel Inner 1278
EDEX Inner

புனேவில் நிச்சயிக்கப்பட்ட இளைஞரிடம் இருந்து பெற்ற 1 கோடி ரூபாயை வைத்தே அவரை, தனது காதலன் மூலம் காதலி ஷியா கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த 18 ஆம் திகதி இளம்பெண் ஷியா கோயல் என்பவர் தனது வருங்கால கணவன் கேதன் அகர்வால் என்பவரை மலை உச்சியில் இருந்து 350 அடி பள்ளத்தில் காதலன் துணையோடு தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இக்கொலை தொடர்பாக ஷியாவும், அவரது காதலன் சேதன் சௌத்ரியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் அடுத்தடுத்து என பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. ஷியாவும் அவரது கூட்டாளி சேதனும் மிக நுணுக்கமாக கொலையை திட்டமிட்டு, அதை ஒரு விபத்தாக மாற்ற முயன்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சம்பவத்தன்று, புனே லோனாவாலாவில் உள்ள லோஹாகட் கோட்டைக்கு சென்று ஷியா மற்றும் கேதனை காதலன் சேதன் சௌத்ரி பின்தொடர்ந்து சென்றுள்ளார். மலை முகடுக்கு அருகில் சென்று காத்திருந்த சேதன், ஷியாவின் சிக்னலுக்காக அங்கு காத்திருந்துள்ளார். ஷியா சிக்னல் கொடுத்தவுடன் கேதன் அகர்வாலை பின்னால் இருந்து காதலன் சேதன் சௌத்ரி தள்ளிவிட்டுள்ளார் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

இதற்கிடையே இந்த கொலை வழக்கில் புதிய தகவலாக தனக்கு நிச்சயிக்கப்பட்ட கேதனை, காதலன் சவுத்ரி மூலம் திட்டமிட்டு லோஹோகட் மலைக்கோட்டைக்கு அழைத்துச் சென்று தள்ளி விட்டு ஷியா கொலை செய்தார். இதில் இருவரும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான முறை தொலைபேசியில் பேசியது உள்ளிட்ட பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இச்சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

திருமணத்திற்கு ஷாப்பிங் செல்ல வேண்டும் எனக் கூறி மணமகனிடம் 1 கோடி ரூபாய் வாங்கிய ஷியா, அதை அவரது கொலைக்கே பயன்படுத்த காதலனுக்கு டிரான்ஸ்பர் செய்ததாக பொலிஸார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 

குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் தங்கள் மகளுக்கு மரண தண்டனை தரவேண்டும் என ஷியாவின் பெற்றோரே கூறுமளவிற்கு ஈவு இரக்கமின்றி கொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, கைதாகியுள்ள சேத்தன் சவுத்ரி மற்றும் ஷியாவிற்கு விளக்கமறியல் வரும் 3 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278